• Latest News

    February 07, 2014

    கல்முனை மாநகர சபையில் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை

    எம்.வை.அமீர்;
    கல்முனை மாநகர சபையில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாநகர மேயர்  நிசாம் காரியப்பர் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

    இது தொடர்பாக கிழக்கு மாகாண சபையின் உயர் அதிகாரிகளை சந்தித்து அவர் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.
    நேற்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண சபைக்கு விஜயம் செய்த மேயர் நிசாம் காரியப்பர், மாகான சபையின் பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்த்தன , முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், மாகாண உள்ளூராட்சி  ஆணையாளர் எம்.வை.சலீம், பிரதிப் பிரதம செயலாளர்களான எஸ்.குமரகுருபரன், கலாமதி ஆகியோரை சந்தித்து கல்முனை மாநகர சபையில் நிலவி வருகின்ற ஆளணி வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் நீண்ட காலமாக பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி- அவை தொடர்பில் தாம் எடுத்து வருகின்ற முயற்சிகள் குறித்து தெளிவுபடுத்தியதுடன் மாகாண சபையின் ஒத்துழைப்பையும் வேண்டியுள்ளார்.

    இதன்போது குறித்த விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் மாநகர சபை வெற்றிடங்களை நிரப்புவதற்கும் தற்காலிக ஊழியர்களை நிரந்தர நியமனம் செய்வதற்கும் வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவ்வதிகாரிகள் உடன்பட்டுள்ளனர்.

    அதேவேளை கல்முனை மாநகர சபையின் வளப் பற்றாக்குறை மற்றும் தேவைகள் குறித்தும் முதல்வர் நிசாம் காரியப்பர் அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார்.


    Displaying kmc4.JPG
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மாநகர சபையில் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top