வாள்கள் மற்றும் இலங்கை இராணுவச் சீருடையுடன் இருந்த நால்வரை யாழ்ப்பாணப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
யாழ்.நகரினை அண்டிய தலையாளி ஞானவைரவர் ஆலயத்தின் மடத்தில் வைத்து நேற்று இரவு இவர்கள் கைது செய்யப்படடுள்ளனர் .கைதான சந்தேகநபர்களிடம் இருந்து 4 வாள்களும் ஒரு தொகுதி இராணுவச் சீருடையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கைப்பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இதே போன்று இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவுடன் சேர்ந்து இயங்கிய ஆவா குழுவினர் பெரும்பிரச்சாரங்களுடன் கைது செய்யப்பட்ட போதும் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment