எம்.வை.அமீர்;
இலங்கையின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் புதிய சாரணர்களுக்கான ஒருநாள் பயிற்சி பாசறை ஒன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சாரணர்கள் முழு சிரமதான பணிகளில் ஈடுபட்டதுடன் சாரணர் தொடர்பான பயிற்சி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். தலைமைத்துவ கட்டுப்பாடு, தலைமை தாங்கும் திறன் அபிவிருத்தி மற்றும் நெகிழ்வுத்தன்மையுடன் செயலாற்றும் தன்மையை உண்டாக்குதல் போன்ற தலைப்புகளிலும் பயிற்சிகள் இடம்பெற்றன.
கல்முனை தேசிய பாடசாலையின் அதிபர் பீ.ஏ.எம்.பதுர்டீன் நிகழ்வுகளை சாரணர் கொடியை ஏற்றி வைத்ததன் மூலம் ஆரம்பித்து வைத்தார். இதில் அக்கரைப்பற்று கால்முனை மாவட்ட சாரணர் சங்க ஆணையாளர் ஐ.எல்.ஏ.மஜீத் மற்றும் முன்னாள் அக்கரைப்பற்று கால்முனை மாவட்ட சாரணர் சங்க ஆணையாளர் எம்.ஐ.முஸ்தபா. அக்கரைப்பற்று கால்முனை மாவட்ட சாரணர் சங்க பயிற்சி ஆணையாளர் கே.எம்.தமீம் சாரணர் குழுத்தலைவர் எம்.ஏ.சலாம், ஏ.ஆர்.எம்.யூசுப் மற்றும் இணைப்பாடவிதான ஆசிரியர் அலியார் பைசர், இணைப்பாடவிதான ஆசிரியர் யூ.எல்.எஸ்.ஹமீட் போன்றோரும் பங்கு கொண்டிருந்தனர்.இலங்கையின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் புதிய சாரணர்களுக்கான ஒருநாள் பயிற்சி பாசறை ஒன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சாரணர்கள் முழு சிரமதான பணிகளில் ஈடுபட்டதுடன் சாரணர் தொடர்பான பயிற்சி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். தலைமைத்துவ கட்டுப்பாடு, தலைமை தாங்கும் திறன் அபிவிருத்தி மற்றும் நெகிழ்வுத்தன்மையுடன் செயலாற்றும் தன்மையை உண்டாக்குதல் போன்ற தலைப்புகளிலும் பயிற்சிகள் இடம்பெற்றன.

0 comments:
Post a Comment