பி.எம்.எம்.ஏ.காதர்;பெரிய நீலாவணை பிரதான வீதியில் அமைந்திருக்;கும் வாகன சேவிஸ் நிலையம் நேற்று (2014-02-02) மதியம் திடிரெனத்; தீப்பற்றிக் கொண்டது. ஸ்தலத்தில் நின்ற கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் எடுத்த துரித நடவடிக்கையினால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கல்முனை பொலிசாரும் விஷேட அதிரடிப்படையினரும் கல்முனை மாநகர சபையின் தீ அணைப்புப்பிரிவினரும் உடனடியாக வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்படடது. தீ ஏற்பட்டது பற்றி பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 comments:
Post a Comment