சுலைமான் றாபி;
நேற்று
முன்தினம் ஒலுவில் கடற்கரையில் 3 நண்பர்களுடன் குளிக்கும்போது நீரில்
மூழ்கி காணாமல் போன மருதமுனையைச் சேர்ந்த எம். றிகாஸ் (வயது 24) என்பவரின்
ஜனாஸா இன்று (03.02.2014) காலை அதே இடத்தில் கரையொதிங்கியுள்ளது.
ஒலுவில்
முகத்துவாரக் கடலில் நீராடச் சென்று, கடல் அலையைத் தடுப்பதற்காக
போடப்பட்டுள்ள பாறாங்கற்களுக்கு மேலாக நடந்து சென்று கொண்டிருந்த மூன்று
இளைஞர்கள் கடல் அலையில் சிக்குண்ட போதிலும் இருவர் உடனடியாக
காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதேவேளை கடல்
அலையினால் அடித்துச் செல்லப்பட்டு, காணாமல் போனவரை தேடும் பணியில் பொலிஸ்,
கடற்படையினர் மற்றும் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தது
குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:
Post a Comment