• Latest News

    February 08, 2014

    சர்வதேச விசாரணை அவசியமா இல்லையா உறுப்பு நாடுகளே நிர்ணயிக்க வேண்டும்

    இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரத்தில் சர்வதேச விசாரணை அவசியமா இல்லையா என்பதனை உறுப்பு நாடுகளே நிர்ணயிக்க வேண்டுமெனவும் அவர்   தெரிவித்துள்ளார் .
    யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமா இல்லையா என்பதனை அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளே தீர்மானிக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது குற்றச் செயல்கள் இடம்பெற்றனவா என்பது குறித்து ஆராயப்பட  வேண்டியது அவசியமானது எனவும்  அவர் வலியுறுத்தியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சர்வதேச விசாரணை அவசியமா இல்லையா உறுப்பு நாடுகளே நிர்ணயிக்க வேண்டும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top