கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 வலயங்களிலுள்ள சிறப்பான பிள்ளை நேயப்பாடசாலைகளை தரிசிக்கும் கள ஆய்வினை மேற்கொண்டு மாகாண
கல்வித் திணைக்களத்தின் ஆரம்பப்பிரிவு பணிப்பாளர் உதயகுமார் அவர்களின் தலைமையில் இவ்வதிகாரிகள் 2013.03.13 ஆந் திகதி காலை 11.00 மணியளவில் மேற்
பாடசாலைக்கு விஜயத்தினை மேற்கொண்டார்கள்.
இக்குழுவில் மாகாணக் கல்விப் பணிமனியின் உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் 17 வலயத்தின் கல்வி அதிகாரிகளும் இணைந்து கொண்டனர் என்பது
குறிப்பிடத்தக்கதாகும்.
இக்குழுவினரை இப்பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் அவர்கள் வரவேற்றதுடன் மேலும் இப்பாடசாலையின்
இணைக்கப்பட்டுள்ள அதிபர் சேவையிலுள்ள திருமதி KK. அஹமட் அவர்களும் கலந்து கொண்டனர்.
சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் சார்பாக அதன் பிரதி வலயக்கல்விப் பணிப்பாளர் SLA. றஹீம் மற்றும் ஆரம்பப்
பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் ALM. காதர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
தகவல் . ஏ.எம். தாஹாநழீம் - பிரதி அதிபர்


0 comments:
Post a Comment