• Latest News

    March 13, 2014

    தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் பிரியாவிடை

    எம்.வை.அமீர்;
     தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் கல்வி சார ஊழியர் மேன்பாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் பிரியாவிடை நிகழ்வு 2014-03-13 பகல் இடம்பெற்றது.

    மிக நீண்டகாலமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆய்வுகூட தொழில்நுட்ப உத்தியோகத்தராக சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தில் கடமையாற்றிக்கொண்டிருக்கும் வன்னியசிங்கம் பவானந்தன் மாற்றுதல் பெற்று ஒலுவிலில் அமைந்துள்ள பொறியல் பீடத்துக்கு மாற்றுதல் கிடைத்து சென்றதை மையமாக வைத்தே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்நிகழ்வுக்கு விசேட அதிதியாக பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட உதவிப்பதிவாளர் பீ.எம்.முபீன் கலந்துகொண்டதுடன் தென்கிழக்கு பலகலைக்கழக கல்விசார ஊழியர் சங்கத்தலைவர் வை.முபாறக் மற்றும் பிரயோக விஞ்ஞான பீடத்தின் கல்விசார ஊழியர்களின் மேன்பாட்டு அமைப்பின் தலைவர்  எம்.ஏ.றிபாயிஸ் முகம்மட் அதன் செயலாளர் பர்சானா முஸ்தபா போறோருடன் பிரயோக விஞ்ஞான பீடத்தில் கடமைபுரியும் அனைத்து கல்விசார ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

    இங்கு பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட உதவிப்பதிவாளர் பீ.எம்.முபீன் கருத்துத் தெரிவித்தபோது ஊளியர்களுக்கிடையேயான இவ்வாறான நிகழ்வுகள் அவர்களது அன்யோன்யத்தையும் பரஸ்பர மிகுந்த இறுக்கத்தையும் காட்டுவதாகவும்  பவானந்தன் நீண்ட தூரம் பயணம் செய்து சுமார் 20 வருடங்கள் கஷ்டமான சுழலிலும் இங்குவந்து பணிபுரிந்ததை மிகவும் மகிழ்வுடன் நினைவு கூர்வதாகவும் தெரிவித்தார். இங்கு சக ஊழியரான எஸ்.றமீசும் பவானந்தன் பற்றிய விடயங்கள் சம்மந்தமாக உரையாற்றினார்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் பிரியாவிடை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top