அஷ்ரப் ஏ சமத் ;
இன்று காலை கிழக்கு மாகாண தமிழ் சிவில் சமூக பிரஜைகள் எனும் அமைப்பினர் அம்பாறை மாவட்டத்தில் இருந்து 3 பஸ்கள் மூலம் கொழும்பு வந்து இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் முன் வைக்கப்படுகின்ற பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடாத்தினார்கள்.
அத்துடன் கொழும்பு நகரமண்டபத்தில் இருந்து நடைபவனியாக இம் மக்கள் ஜக்கிய நாடுகளின் இலங்கை அலுவலகத்திற்குச் முன்பு சென்று தமது எதிர்ப்புக்களை தெரிவித்தனர்.
அதன் பின்னர் அங்கிருந்து காலிவீதியாக நடைபவனியாக வந்து கொள்ளுப்பிட்டியில் உள்ள அமேரிக்க தூதுவர் ஆலயத்தை அடைந்தனர். இப் பிரஜைகளின் ஏற்பாட்டாளர் சீலன் என்பவர் அமேரிக்க தூதுவர் ஆலயத்தின் அதிகாரி ஒருவரிடம் ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு தமது கண்டனத்தை தெரிவிப்பதாகவும் அவர் கொண்டுவந்த அறிக்கையையும் கையளித்தார்.
இக் கூட்டத்தில் புணர் வாழ்வுபெற்ற விடுதலைப்புலிகளின் வைத்தியராக செயல்பட்ட ஒருவர் கருத்து தெரிவிக்கையில்: தமிழர்களாகிய நாங்கள் இலங்கையில் மிகவும் அமைதியாகவும், சமாதானமாகவும் வாழ்ந்து வருகின்றோம். கடந்த காலத்தில் யுத்தத்தில் இங்கு வாழும் மக்களே மிகவும் கஸ்டங்களை எதிர்நோக்கினோம். ஆனால் வெளிநாடுகளில் மிகவும் சொகுசாக வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களே இலங்கைக்கு எதிராக செயல்படுகின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பல அபிவிருத்தித் திட்டங்களை எமக்கு செய்து தருகின்றார். மிகவும் விரிவாக கொழும்பு வந்தோம். ஜனாதிபதியின் ஆட்சி நிலைத்திருக்க வேண்டும். நாங்கள் அவருக்கு சார்பாகவே இங்கு வந்துள்ளோம். ஏனத் தெரிவித்தார்.
திருக்கோவில் கோவிலில் அகதியாக வாழ்ந்து வந்த வயோதிப பெண்ஒருவர் அங்கு ரூபவாஹினி தொலைக்காட்சிக்கு குரல் தருகையில் : எனக்கு வீடு இல்லை, நான் இப்ப திருக்கோவிலில் உள்ள கோவிலில் அகதியா வாழந்து வருகின்றேன். எனது வீட்டையும் எங்களையும் அம்பாறையில் இருந்து சிங்கள மக்கள் துறத்தி விட்டார்கள். அந்த இடத்தையும் அவர்கள் பிடித்துவிட்டார்கள். இன்று கொழும்புக்கு அழைத்து வந்து ஜனாதிபதியிடம் வீட்டைக் கேள் என்றுதான் அழைத்து வந்தார்கள் என அப் பெண் தெரிவித்தார்.
ஊடகவியாளர்: இங்கு ஜெனிவா பிரேரணைக்கு ஆர்ப்பாட்டம் நடக்குது அதற்குத்தானே வந்தீர்கள் என கேட்டடர் ? இல்லை. கொழும்புக்கு வீடு ஒன்றை பெற்றுக்கொள்ள நீ அரசாங்கத்திடம் நேரடியாக பேசு என்றுதான் அழைத்து வந்தார்கள் எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment