• Latest News

    March 30, 2014

    மியான்மரில் முதன் முறையாக ஓரின சேர்க்கை ஜோடி திருமணம் !

    மியான்மர் நாட்டில் முதல் முறையாக ஓரின சேர்க்கை ஜோடி பாரம்பரிய முறைப் படி திருமணம் செய்து கொண்டனர்.

    மேலைநாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் தங்களையும் மற்றவர்களை போல சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதில் ஒரு சில நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் ஒன்றாக வசிக்கவும்இ திருமணம் செய்து கொள்ளவும் சட்டரீதியான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
    ஆனால், இந்தியா, மியான்மர் போன்ற தெற்காசிய நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடையாது. இந்நிலையில் மியான்மர் நாட்டில் ஓரின சேர்க்கை ஜோடி ஒன்று யாங்கூன் நகரத்தில் வழக்கமான  சடங்குகளோடு திருமணம் செய்து கொண்டனர்.

    யாங்கூன் நகரத்தை சேர்ந்த தின் கோ கோ என்பவரும், மியோ மின் என்பவரும் ஓரின சேர்க்கையாளர்களாக கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

     யாங்கூனில் உள்ள மார்க்கெட் பகுதியில் அமைந்திருக்கும் பிரபல ஓட்டலில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட நண்பர்கள்,  உறவினர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள்  கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மியான்மர் முறைப்படி இருவரும் பரஸ்பரம் மோதிரம் மாற்றி கொண்டு திருமணம் செய்து கொண்டனர்.

    இதற்காக இருவரும் மியான்மர் நாட்டு பாரம்பரிய உடையில் வந்திருந்தனர். இதுகுறித்து தின் கோ கோ கூறுகையில், எனது குடும்பத்தினரிடம் என் விருப்பத்தை தெரிவித்தேன். நீண்ட மனப் போராட்டத்துக்கு பிறகு எனக்கு சம்மதம் தெரிவித்தனர்.

    தற்போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று தெரிவித்தார். இந்த திருமணத்துக்கு சட்டரீதியாக அங்கீகாரம் எதுவும் கிடையாது என்ற போதிலும் புத்த பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் மியான்மரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மியான்மரில் முதன் முறையாக ஓரின சேர்க்கை ஜோடி திருமணம் ! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top