மேல் மாகாணத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இரண்டு ஆசனங்கள்
கிடைத்துள்ளன. மேல் மாகாணத்தில் மு. கா. மொத்தமாக 49515 வாக்குகளை
பெற்றுள்ளது.
இந்த
தேர்தலில் முதன்முறையாக அரசுடன் இணையாமல் தேர்தலில் போட்டியிட்ட ரிஷாத்
பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேல் மாகாணத்தில் ஆசனம்
ஒன்றை பெற்றிருப்பதும் இங்கு குறிப்பிட தக்கது.
கொழும்பு மாவட்டத்தில் ஒரு ஆசனமும் கம்பஹா
மாவட்டத்தில் ஒரு ஆசனமும் கிடைத்துள்ள அதே வேளை களுத்துறை மாவட்டத்தில்
ஆசனம் ஒன்றை பெற்றுக்கொள்ளும் மு. காவின் முயற்சி தோல்வியில்
முடிந்துள்ளது.

0 comments:
Post a Comment