• Latest News

    March 13, 2014

    அமெரிக்காவின் ஜெனிவா பிரேரணைக்கு எதிராக நாளை கல்முனையில் எதிர்ப்புப் பேரணி!

    ஜெனீவா பிரேரணையில் ஜனாதிபதியையும், எமது நாட்டையும் ஆதரித்து கல்முனை முஸ்லிம் மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கவனயீர்ப்பு பேரணி நாளை வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற உள்ளது.

    கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் ஆரம்பிக்க உள்ள இந்தப்பேரணி கல்முனை நகர் பிரதேச செயலகம் வரை செல்ல உள்ளது.
     
    கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல்,  கல்முனை அன்சார் சுன்னத்துல் முகம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல், இஸ்லாமபாத் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல் ஆகியன உட்பட 20 பள்ளிவாசல்கள் 03 வர்த்தக, கைத்தொழில் அமைப்புக்கள், 22 சமூக சேவை முன்னெடுப்பு அமைப்புக்கள், 18 விளையாட்டுக்கழகங்கள் மற்றும் ஏனைய பிரதேச அமைப்புக்கள் ஒன்றினைந்து இந்த கவனயீர்ப்பு பேரணியை நடாத்த உள்ளதாக கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் பொது நிறுவனங்களின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமெரிக்காவின் ஜெனிவா பிரேரணைக்கு எதிராக நாளை கல்முனையில் எதிர்ப்புப் பேரணி! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top