• Latest News

    March 13, 2014

    அதிபர் சம்சுதீன் மௌலானாவின் கடைசிக் காலைக் கூட்டம்!

    சுலைமான் றாபி;
    பாடசாலைகளில் திங்கட்கிழமைதான் காலை ஆராதனைக் கூட்டங்கள் இடம்பெறுவது வழமை. ஆனால் இன்று (13.03.2014) நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் அதிபர் அல் ஹாஜ் எஸ்.ஏ.எஸ்.எம் சம்சுதீன் மௌலானா அவர்கள் தனது 41 வருட ஆசிரியர் மற்றும் அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதனை முன்னிட்டு இன்று விஷேட காலை ஆராதனைக் கூட்டம் பாடசாலையின் பிரதி அதிபர் எ.எல். லதீப் தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு ஓய்வு பெற்றுசெல்லும் அதிபரினை கௌரவித்தனர். 

    இதேவேளை இந்தக் கூட்டத்தின் சிறப்பம்சமாக "மரகவி" மௌலவி எம்.எஸ். அப்துல் றசீட் அவர்களினால் வாழ்த்துப்பாடலும், அதனைத்தொடர்ந்து நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை சார்பாக சாரணர் துறையில் ஜனாதிபதி விருது வென்ற உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயிலும் மாணவன் எம். நபீலுக்கு ஞாபகச் சின்னமும் அதிபரினால் வழங்கி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அதிபர் சம்சுதீன் மௌலானாவின் கடைசிக் காலைக் கூட்டம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top