• Latest News

    March 08, 2014

    முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்த பாடசாலை

    கொழும்பு ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப்பை அணிந்து வரக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளனர். 
     
    இரண்டு முஸ்லிம் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதிக்க வேண்டுமாயின், அவர்கள் ஹிஜாப்பை கழற்ற வேண்டும் என அந்த பாடசாலையின் அதிகாரி நேற்று வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


    மாணவிகளின் பெற்றோர் அதிபரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுத்ததுடன் அந்த பாடசாலையில் பதற்றம் ஏற்பட்டது.

    இதனையடுத்து, கோட்டே மாநகர மேயர் பிரச்சினையில் தலையிட்டதுடன் இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்த்து கொள்ளுமாறு பாடசாலை நிர்வாகத்தினரிடம் பெற்றோரிடம் வலியுறுத்தியுள்ளார்.

    ஹிஜாப் அணிய கூடாது என்று தடைவிதித்ததை பாடசாலை ஆதரித்து என்ற செய்திகளை மேயர் மறுத்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்த பாடசாலை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top