• Latest News

    March 08, 2014

    விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராய்வு!

    ஏ.எம். ஹஸ்னி;
    கல்முனை, சாய்ந்தமருது, சேனைக்குடியிருப்பு பிரதேச கமநலச் சேவை மத்திய நிலைய உயரதிகாரிகளுக்கும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸூக்குமிடையே கல்முனை பிரதேச விவசாய அபிவிருத்தி பற்றி ஆராயும் உயர்மட்டக் கூட்டம் சாய்ந்தமருது கமநலச் சேவைகள் மத்திய நிலையத்தில் நேற்று (07) இடம்பெற்றது.

    அம்பாறை மாவட்ட கமநல திணைக்கள பதில் ஆணையாளர் எஸ்.ஏ.வீ. மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் எம்.திலகராஜன், சாய்ந்தமருது விவசாய போதனாசியர் எம்.எம்.எம்.ஜெமீல், சாய்ந்தமருது கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.ஏ.கபூர், கல்முனை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.ஹனீபா மற்றும் கமநல சங்க பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், கமநலச் சேவை மத்திய நிலையங்களில் காணப்படும் குறைபாடுகள், நெற்காணிகளுக்கான நீர்ப்பாசனம், வடிச்சல் மற்றும் உரக் களஞ்சியசாலை, நெல் களஞ்சியசாலை என்பன நிர்மாணித்தல் போன்ற கோரிக்கைள் இதன்போது பாராளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்டது.

    இத்திட்டங்களை மேற்கொள்வதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்து தருவதாக பாராளுமன்ற உறுப்பினா சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வாக்குறுதியளித்தார்.
     
    இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் விவசாயிகளுக்கும், கமநலச் சேவை உத்தியோகத்தர்களுக்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டி கமநலச் சங்க பிரதிநிதிகளாலும், உத்தியோகத்தர்களினாலும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராய்வு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top