• Latest News

    March 08, 2014

    ரவூப் ஹக்கீமின் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்

    சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று, இலங்கை சட்டத்தரணிகள் அமைப்பின் தேசிய ஒன்றியம் கோரியுள்ளது.

    அதன் இணைப்பாளர் சட்டத்தரணி கபில கமகே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

    அமைச்சர் ரவூக் ஹக்கீம், அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் இலங்கைக்கு எதிரான தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை கையளித்தார்.

    இதன் அடிப்படையிலேயே நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் வெளியிட்டிருந்த அறிக்கை அமைந்திருந்தது. இந்த நிலையில் அவரது குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்.

    இலங்கை அரசியல் யாப்பின் 6ம் சரத்தின் கீழ் இதற்கான அனுமதி காணப்படுவதாக என்று அவர் கோரியுள்ளார். எனினும் அமைச்சர் ரவூக் ஹக்கீம் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரவூப் ஹக்கீமின் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top