மேலாதிக்கப் போக்கின் விளைவாக ஏற்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த நாங்கள் அணைகட்ட முடியாத நிலையில் இருப்பதாக சிலர் விமர்சிக்கின்றனர். நாங்கள் எவ்வளவோ உள்ளகப் போராட்டங்களில் ஈடுபட்டு எமது பிரச்சினைகளை சரியான திசையில் நகர்த்த வேண்டும் என முயற்சித்து, சலித்துப் போயிருந்த நிலையில் தான் சர்வதேசத்தின் கவனத்திற்கு அவற்றை கொண்டு வருவதற்கான நிலைமை ஏற்பட்டது.
இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
வியாழக்கிழமை (20) இரவு தெஹிவளை, ரீஜன்சி பென்குயெட் மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒன்று கூடல் நிகழ்வில் உரையாற்றும் பொழுதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.
பெருந்தொகையானோர் கலந்து கொண்ட இந் நிகழ்வில் கட்சியின் தவிசாளர் அமைச்சர் பஷீர் சேகுதாவூத், செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸன் அலி, எம்.பி ஆகியோரும் உரையாற்றினார்.
அங்கு உரையாற்றும் பொழுது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
இந்த அரங்கத்தை வழமையான தேர்தல் பிரசார கூட்டமாக நான் காணவில்லை. இதை கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் வித்தியாசமான ஒரு அரங்கமாக நான் காண்கிறேன்.
ஒரு தேர்தல் மேடையில் பேசுகின்ற பாணியில் அல்லாமல் வேறுபட்ட விதத்தில் பேச வேண்டிய தேவையிருக்கிறது. இன்றைய சூழலில் இலங்கை அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் எதிர்காலத்தில் எவ்வாறான ஒரு நிலவரத்தை தோற்றுவிக்கப் போகின்றது என்ற அடிப்படையில் அரசியலை எவ்வாறு கையாள்வது என்பதில் பலவாறான தடுமாற்றப் போக்குகளை நாம் அவதானிக்கிறோம்.
இந்த நாட்டில் 1956 ஆம் ஆண்டு ஏற்பட்ட தேசியவாத அலை ஏற்படுத்திய பாரிய மாற்றம் எத்தகையது என்பது பற்றி அந்த காலத்தில் வாழ்ந்தோருக்கு என்னைவிட தெரிந்திருக்கும்.
அதே மாதிரியான ஒரு தேசியவாத அலையில், ஒரு யுத்தத்தை வென்றுவிட்டோம் என்ற வெற்றிக் களிப்பில், ஆணவத்தில், அகங்காரத்தில் திளைத்திருக்கும் ஓர் அரசாங்கத்தின் அங்கமாகத் தான் நாம் இருக்கிறோம்.
இவ்வாறான அரசுகளோடு உறவாடுகின்ற போது, அரசியல் சமம்பாட்டில் காணப்படும் சில பிரயோகச் சிக்கல்களுக்கு கூட்டுக் கட்சிகள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு முஸ்லிம் காங்கிரஸ் விதிவிலக்கல்ல.
அரசியல் கட்சிகளை கூட வைத்து பலவீனப்படுத்துகின்ற அரசியல் தந்திரம் என்பது பலவாறாக பல கட்டங்களில் இந்த நாட்டில் அரங்கேறியிருக்கின்றது. இதை ஆரம்பத்தில் இடதுசாரி கட்சியினர் அனுபவித்தனர். 1970களுக்கு பிறகு அதுவும் குறிப்பாக விகிதாசார தேர்தல் முறைமை நடைமுறைக்கு வந்த பிறகு, தனி நபர்களின் வாக்கு வங்கி என்பதை விடவும், கட்சிகளின் வாக்கு வங்கி என்பது ஒரு சாவலுக்குரிய விடயமாக மாறி, அழுத்தம் செலுத்துகின்ற விடயமாக வந்த பிறகு, இன்றைய சூழலில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் நிலைவரங்களோடு கடந்த கால நிலைமையை ஒப்பிட்டுப் பார்க்கின்ற பொழுது, இந்த புதுவிதமான சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது பற்றிய சரியான பார்வை பலருக்கு இல்லாமல் இருக்கலாம்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்தில் இணைகின்ற போதும் இதற்கு முந்திய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் இருந்த போதும் எங்களுக்கு ஒர் அனுபவம் இருக்கிறது. தலைவர் அஷ்ரபின் மறைவிற்கு பிறகு ஐ.தே.க அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தியதிலும் இந்த அரசாங்கத்தை இரண்டு விடுத்தம் ஆட்சி அமைக்காமல் தடுக்கின்ற கைங்கரியத்திலும் பிரதானமான பாத்திரத்தை வகித்தவர்கள் என்ற அந்தஸ்த்தில் நாங்கள் இருக்கிறோம்.
இவற்றை மறந்து இந்த அரசாங்கத்தோடு உள்ள உறவு பற்றி பேச முடியாது. ஆட்சி அமைப்பதற்கு இந்த அரசாங்கத்துக்கு கைகொடுக்காத எங்களோடு அரசாங்கம் கைகோர்;க்கின்ற நிர்ப்பந்தத்தை ஆக்கியிருப்பதால் ஆணவத்தோடும் அகங்காரத்தோடும் கையாளப்படுகின்ற சூழலில் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பங்காளிக் கட்சி என்று பகட்டுக்காக பேசப்படுகின்றது.
இந்த வித்தியாசத்தை புரிந்து கொண்ட பின்னணியில் முஸ்லிம் காங்கிரஸின் வகிபாகம் என்ன என்பதைப் பற்றி நாங்கள் எங்களுக்குள் சில விஷயங்களை ஜீரணித்துக்கொண்டுதான் அரசியலை எவ்வாறு கையாள்கிறோம் என்பதைப் பற்றிய உள் விமர்சனங்களை செய்துகொள்ள வேண்டும்.
எடுத்த எடுப்பில், அதிகப் பிரசங்கித்தனமாக நாங்கள் சவால் விடுப்பது போலத் தோன்றும். ஆனால், இந்த சமூகத்தின் பேரம் பேசும் சக்தியை மீட்டுக்கொள்வதற்கான சில எதிர்பார்ப்புகளுடனான யுக்தியை தவிர, எச்சரிக்கின்ற பாணியில் கதைக்கிறோம் என கருதப்பட்டு விடக் கூடாது.
என்னைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தலை விட, இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் நடக்கப் போகும் ஒரு நாடு தழுவிய தேர்தலில், அது ஜனாதிபதித் தேர்தலாக அல்லது பாராளுமன்ற தேர்தலில் இந்த சமூகத்தின் தீர்மானிக்கின்ற சக்தி என்ற அந்தஸ்த்து மீட்டுக்கொள்ளப்படலாம் என்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.
அதை அடிப்படையாக வைத்துத் தான் முஸ்லிம் காங்கிரஸை கடிந்துகொள்ளுகிற ஒரு பாணியில் எங்களோடு முரண்பட்டுக்கொண்டாலும், எங்களது கட்சியோடு உள்ள உறவை முறித்துக்கொள்வதால் ஏற்படக் கூடிய அபாயங்கள் குறித்து அரசாங்கத்திற்கு ஒரு பிரக்ஞை இருக்கிறது என்பதை நான் அண்மைக்காலமாக உணர்ந்து வருகிறேன்.
அதற்காக இந்த விஷயத்தை மிகவும் பக்குவமாகவும், சாணக்கியமாகவும், தூரநோக்கோடும் கையாள வேண்டிய தார்மீக பொறுப்பில் இருக்கின்ற எங்களது வார்த்தையாடல்களை கொஞ்சம் பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இருப்பதை நான் சொல்லியாக வேண்டும்.
இன்று நாங்கள் எதைப் பேசுகிறோம், எவ்வாறு பேசுகிறோம் என்பது மிகவும் கூர்மையாக அவதானிக்கப்படுகின்றது. சில தாக்கங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் பேசுகிறோம். இந்த நாட்டில் வெளிநாட்டுத் தலையீட்டின் ஊடாக ஒரு சமாதானம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற முயற்சி ஐ.தே.க. காலத்தில் நடந்தது.
இப்பொழுது வெளிநாட்டுத் தலையீட்டின் ஊடாக யுத்தத்திற்கு பின்னரான சூழலில் சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றதொரு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த இரண்டு விடயங்களிலும் சர்வதேசமும், இந்த நாட்டின் அரசாங்கமும் முஸ்லிம்களின் பரிமாணம் என்பது அதற்கான உரிய அந்தஸ்தை வழங்கி கவனத்தில் எடுத்ததாக அவ்விரு கட்டங்களிலும் தெரியவில்லை என்பது புரிகின்றது.
ஐ.தே.க யின் புலிகளுடனான புரிந்துணர்வு பேச்சுவார்த்தையின் போது முஸ்லிம்களுக்கு இருந்த மிகப் பெரிய பிரச்சினை மூன்றாம் தரப்பு என்ற அந்தஸ்தை தரவேண்டும் என்ற அங்கலாய்ப்பாகும். அதுபற்றி இப்போது பேசுவதில்லை. அரசும் புலிகளும் சமதரப்பாக அங்கீகாரம் காணப்பட்ட அந்த நிலைமை யுத்தம் முடிந்த பின்னர் அற்றுப் போய்விட்டது.
இப்பொழுது ஜெனீவா பிரகடனம் என்ற விஷயம் கையாளப்படுகின்ற பொழுது, முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட முடிவு குறிப்பிட்ட மட்டத்தில்தான் கலந்துரையாடப்பட்டு கையாளப்பட்டது. ஆனால் இன்று சிலர் அதிலிருந்து தப்பித்துக்கொள்கின்ற தோரணையில் பேசத் தலைப்பட்டுள்ளனர். இந்த நிலவரம் வழமையாக நாங்கள் கட்சிக்குள் எதிர்நோக்குகின்ற மிகப் பெரிய சவாலாகும்.
எவ்வாறான ஆட்சியில் நாங்கள் அங்கமாக இருக்கிறோம். ஏனென்றால் கட்சி என்பது எமது மக்களின் மிகப் பெரிய சொத்து. இது தனிமனிதனுடைய இயக்கம் அல்ல. இந்தப் பலமான இயக்கத்தை பலவீனப்படுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை நாங்கள் மிகவும் சாணக்கியமாக முறியடிப்பதற்கு மக்களைத் தான் தயார்படுத்த வேண்டும்.
நான் உட்பட எந்த ஜாம்பவானாலும் அவற்றை முறியடிப்பது என்பது இலேசான காரியமல்ல. எனவே, இந்த இயக்கத்தை பாதுகாக்கின்ற பணியும், புடம்போடுகின்ற பணியும் உங்களுடையது.
கட்சிக்கு வாக்களியுங்கள் என்று வெறுமனே கூறுவதை விடவும், சவால்களுக்கு எங்களை தயார்படுத்துவது எப்படி என்று பேசுவதுதான் பொறுத்தமானதென்று நான் நினைக்கிறேன்.
முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற பிரதானமான பிரச்சினையொன்று தான் இணக்க அரசியலில் நாங்கள் அடிக்கடி சந்தித்து வருகின்ற பின்னடைவுகள் என்ற விடயம். இது சரியாக கிரகிக்கப்படுவதில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் முடிவில் இருப்பதன் காரணமாக அரசாங்கம் எங்களை எப்பொழுதும் சந்தேகப் பார்வையோடு பார்ப்பது மட்டுமல்லாது, எங்களைப் பலவீனப்படுத்துகின்ற முயற்சியிலும் இன்னும் கொஞ்சம் கூடுதலான சிரத்தையோடு இருக்கிறார்கள். இதை மனங்கொள்ளாமல் இந்தப் போராட்;டத்தை நாம் முன்னெடுக்க முடியாது.
இன்று முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு அடுத்த கூடுதலான பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இருந்தாலும், பாராளுமன்ற சம்பிரதாயங்கள் அனைத்தையும் மீறி இனப் பிரச்சினை தீர்வுக்காக அமைக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ளது. என்னை மாத்திரமல்ல, சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவராக இருந்த திஸ்ஸ விதாரனவை கூட இந்த அரசாங்கம் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து ஒதுக்கி வைத்திருக்கிறது. அவர் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் சார்பாக வெளியிட்ட அறிக்கை அரசாங்கத்தை திருப்திபடுத்துவதாக இல்லை என்பதுதான் அதற்கு காரணம்.
தாங்களே நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதந்துரைகளை கூட நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் காட்டும் அசிரத்தை, தாமதப் போக்கு என்பன அரசாங்கத்திற்குள் இருக்கும் தீவிரவாத சக்திகளின் பணயக் கைதிகளாக இருப்பது அல்லது அந்த தீவிரவாத சக்திகளைப் பாவித்து தமது போக்கை மாற்றாமல் கொண்டு போவது என்ற ஆட்சி கட்டமைப்பில் இருந்து கொண்டு நாங்கள் ஒர் இணக்க அரசியலைச் செய்கின்றதான ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கியிருக்கிறோம்.
ஐக்கிய தேசியக் கட்சி என்பது சரியான வேலையைச் செய்வதற்கு கொஞ்சம் கூடுதலாக யோசிக்கின்ற கட்சி என்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பது பிழையான வேலையைச் செய்வதற்கும் பயமில்லாத கட்சி என்றும் என்னிடம் ஒருவர் கூறினார்.
அரசாங்கத்தோடு உள்ள தொடர்பாடல் என்பது ஜனரஞ்சகமானது என்ற கருத்தை சில தீவிரவாத சக்திகள் ஏற்படுத்தியுள்ளன. இந்தப் பின்னணியில் தான் இன நல்லிணக்கம், சமய சகிப்புத் தன்மை போன்ற விடயங்களில் முஸ்லிம் சமூகம் ஆவேசத்தோடும், ஆத்திரத்தோடும் இருக்கிறது.
இந்த குழப்பத்திற்கு காரணமான இயக்கங்கள் யுத்தத்திற்கு பின்னர் தோற்றம் எடுத்தவையாகும். அவை முன்னர் இருக்கவில்லை. அவற்றுக்கு எங்கிருந்து அனுக்கிரகம் கிடைக்கிறது என்று முஸ்லிம்கள் கேள்வி கேட்பதில்லை. ஏனென்றால், அதற்கான விடையை அவர்கள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதற்காக முஸ்லிம் காங்கிரஸோடும் பலர் கடுங் கோபத்தில் இருக்கிறார்கள். முஸ்லிம் காங்கிரஸ் ஒருவிதமான சராணாகதி போக்கிலே போய்க்கொண்டிருக்கிறது என்பது பரவலாக எங்களுக்கு எதிராக இருந்து வரும் விமர்சனமாகும். இதுபற்றி வெளிப்படையாக கதைக்காமல் நாங்கள் எதிர் நோக்கும் சவால்களைப் பற்றி பேச முடியாது. மேலாதிக்க அரசியலில் முஸ்லிம் காங்கிரஸூம் அகப்பட்டுக்கொண்டது என்று நோக்குபவர்களும் இருக்கிறார்கள்.
மேலாதிக்கப் போக்கின் விளைவாக ஏற்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த நாங்கள் அணைகட்ட முடியாது நிலையில் இருப்பதாகவும் சிலர் விமர்சிக்கின்றனர். நாங்கள் எவ்வளவோ உள்ளகப் போராட்டங்களில் ஈடுபட்டு எமது பிரச்சினைகளை சரியான திசையில் நகர்த்த வேண்டும் என முயற்சித்து சலித்துப் போயிருந்த நிலையில் தான், சர்வதேசத்தின் கவனத்திற்கு அவற்றை கொண்டு வருவதற்கான நிலைமை ஏற்பட்டது.
அரசாங்கத்தில் இருக்கும் எல்லா முஸ்லிம் தரப்பினரும் தனியாகவும், கூட்டாகவும் முயற்சித்தும் எமக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை. முஸ்லிம்களின் பிரச்சினையை நாங்கள் மட்டும் தான் பேசினோம் என்று புள்ளிபோட்டுக்கொள்ள நான் விரும்பவில்லை என்பதனால் தான் இதனைச் சொல்கிறேன். நிறைய விடயங்களை நாங்கள் கதைக்கலாம் அது வெறும் தம்பட்டமடிப்பதாக போய்விடும். அதனால் தவிர்த்துக்கொள்கிறேன்.
பட்டறிவின் மூலம் விடயங்களை அணுக வேண்டிய முறை பற்றிய ஒரு நல்ல அனுபவ முதிர்ச்சி எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் பெற்ற அனுபவத்தின் ஊடாக இப்பொழுது முஸ்லிம் சமூகம் உஷார் அடைந்திருக்கிறது என்றார்.
கட்சியின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண சபை அமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமத், கட்சியின் மூத்த துணைத் தலைவர் ஏ.எல். அப்துல் மஜீத், முஸ்லிம் காங்கிரஸ மாகாண சபை உறுப்பினர்கள், வேட்பாளர்கள் உட்பட ஏராளமானோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment