பி.எம்.எம்.எ.காதர்;
'உலக கவிதை தினம் (21-03-2014) மருதமுனை அல்-மதினா வித்தியாலயத்தில் அனுஷ்;டிக்கப்பட்டது. அதிபர் ஏ.ஆர். நிஃமத்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஆசியா மன்றத்தின் நிகழ்சித்; திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் கலந்து சிறப்பித்தார்;. சிறப்பு அதிதியாக அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் அஷ்சேய்க் எப்.எம்.அஹமதுல் அன்சார் மௌலானா கலந்து கொண்டு 'இஸ்லாத்தின் பார்வையில் கவிதை' என்ற தலைப்பில் விஷேட உரையாற்றினார்.
நிகழ்வுகளை அறிவிப்பாள் நஜிமுடீன் எம். ஹஸான் தொகுத்து வழங்கினார். இந்த 'உலக கவிதை தினம்'(றழசடன pழநவசல னயல)1999ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ தாபனத்தால் அறிமுகப்படுத்தப்;பட்டது. இந்த தினத்தை கவிஞர்கள் அனுஷ்டிப்பதில் அக்கறையின்றியே இருக்கின்றனர் ஆனால் இம்முறை இந்த நிகழ்வை மருதமுனை அல்-மதினா வித்தியாலய ஆதிபர் ஏ.ஆர். நிஃமத்துல்லா ஏற்பாடுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




0 comments:
Post a Comment