• Latest News

    March 17, 2014

    ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் சிறிவர்தன உயிரிழப்பு!

     ஹங்வெல்ல – துன்னான பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொரளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரசாத் சிறிவர்தன உயிரிழந்துள்ளார்.

    ஹங்வெல்ல – துன்னான பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றிற்கு எதிராக பொதுமக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின்போது பதற்ற நிலை ஏற்பட்டதனை தொடர்ந்து குழப்பநிலை ஏற்படுத்திய 20 பேர் பொலிஸாரால் கைது செய்யப்படடுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

    இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரினால் கண்ணீர்ப் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது இதே வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் வெட்டி வீழ்த்திய மரம் பிரசாத் சிறிவர்தன மீது விழுந்தமையினால் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் சிறிவர்தன உயிரிழப்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top