• Latest News

    March 17, 2014

    முஸ்லிம் காங்கிரசும் ரீ.என்.ஏ உறவு ஒரு நாள் கட்டாயம் மலரும்: அமைச்சர் ஹக்கீம்

    தம்பி ஹக்கீம், மிகவிரைவில் தமிழ் முஸ்லிம் ஒன்றினைவு மலர்வதை  தான்  எதிர்பார்ப்பதகாகவும்  அதற்காக தான்  காத்துக் கொண்டிருப்பதாகவும் வடமாகான  முதலமைச்சர் விக்னேஸ்வரன் -தெரிவித்துள்ளார் .

    அமைச்சர் ஹக்கீம் உரையாற்றும்போது , விரைவில் முஸ்லிம் காங்கிரஸ் -தமிழ் தேசிய கூட்டமைப்பு உறவு என்றோ ஒரு நாள்  மலரும் என தெரிவித்துள்ளார் .

    ஞாயிறு வீரகேசரி பிரதம ஆசிரியர் ஆர்.பிரபகர் எழுதிய 140 ஆசிரிய தலைப்புக்கள் கொண்ட “தரிசனம் “ எனும் நூல் நேற்று  பம்பலப்பிட்டி சரவஸ்வதி மண்டபத்தில் வெளியீட்டு வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இருவரும் மேற்படி தெரிவித்தனர் .வைக்கப்பட்டது. இந் நூல் வெளியீட்டு வைபவம் வீரகேசரியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

    இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சிறப்பு அதிதியாக நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம், இந்திய பிரதித தூதுவர் பி.குமரண்,பேராசிரியர் சபா ஜெயராசா,சிறப்பு பேச்சாளர் தமிழருவி த சிவகுமாரன், ஆய்வுரையை ஸ்ரீ பிரசாந்தன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்..

    தம்பி ஹக்கீம் மிகவிரைவில் தமிழ் முஸ்லிம் ஒன்றினைவு மலர்வதை  தான்  எதிர்பார்ப்பதகாகவும் . அதற்காக தான்  காத்துக்கொண்டிருப்பதாகவும் வடமாகான  முதலமைச்சர் விக்னேஸ்வரன்  தெரிவித்தார்

    மேலும் அவர் உரையாற்றும் போது , வுவனியாவில் மற்றும் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றம் நடைபெறுவதாகவும் அத்துடன் இராணுவம் பல காணிகளை பிடித்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார் .

    நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவுப் ஹக்கீம் உரையாற்றும்போது , 
    அமைச்சரவையில் இருந்துகொண்டு 13வது திருத்தத்தை கொண்டுவரும் சட்டத்தை எதிர்ததாகவும் அதேபோன்று ஊடக சுதந்திரத்திலும் ஒரு திருத்தம் கொண்டுவந்ததை எதிர்த்தாகவும் தெரிவித்தார்.

    நாடு நகல் அபிவிருத்தித் சட்டத்தை எதிர்த்தாகவும் கிழக்கு மாகணத்தில்; இதனை எமது மாகாணசபையும் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் பதவியிருந்தபோது இந்த நகர்வை தோற்கடித்தாகவும் தெரவித்தார் .

    அன்று இரா சம்பந்தன் அழைப்பை ஏற்று கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைததிருந்தால் அதன் பின்னர் நடைபெற்ற் வடமாகாணசபைத் தேர்தலை நடாத்தியிருக்க மாட்டார்கள்.
    ஆனால் அண்னன் சம்பந்தன் ரீ.என்.ஏ யோடு சேர்ந்து கேளுங்கள் அல்லது தனித்து தேர்தல் கேளுங்கள் என கேட்டுதற்கிணங்க கிழக்கில் நாங்கள் தணியாக தேர்தலில் கேட்டோம். என்றும் தெரிவித்தார் .

    விரைவில் முஸ்லிம் காங்கிரசும் ரீ.என்.ஏ உறவு என்றோ ஒரு நாள் கட்டாயம் மலரும் எனவும் எனவும் அங்கு அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
    அவர் மேலும் உரையாற்றுகையில்

    நேற்று சிங்கள நாளேடொன்றில் என் தொடர்பான கேலிச்சித்திரமென்று வெளியாகியிருந்தது. அதில் என்னுடன் இருக்கும் அமைச்சரவை சகபாடிக்கு ஜனாதிபதி சாப்பிடும் போது மாத்திரம் தான் வாயைத் திறக்க வேண்டும் எனக் கூறுகின்றார். பின்னர் அவர் என்னைப்பார்த்து சாப்பிடும் போது மாத்திரம் தான் வாயை திறக்கும் படி சொல்கின்றார்.

    ஆகவே நாம் வாயைத்திறப்பதற்கு சங்கடப்படும் காலமாக இருக்கின்ற போதும் பத்திரிகை ஆசிரியர் ஒருவரின் ஆசிரியர் தலையங்கங்களை வெளியிடும் இந்நிகழ்வில் தையிரியமாகப் பேசலாம். காரணம் எனது பேச்சில் இருக்கும் ஏதாவது ஒரு விடயத்தை பயன்படுத்தி ஆசிரியர் தலையங்கத்தை தீட்டினால் எனது தலையும் தப்பிக்கொள்ளும் என கருதுகின்றேன்.
    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைவு என்பது சரியான விடயமாகும். தற்போது எம்மைச் சூழ நடக்கும் விடங்களை பார்க்கும் போது அதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்ற என்பது தெளிவாகத் தெரின்றது.

    நாம் கிழக்கு மாகாணத்தில் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்ற முடிவை எடுப்பதற்காக கட்சி மட்டங்களில் சந்திப்புக்களை நடத்திக் கொண்டிருந்தபோது சம்பந்தன் அவர்கள் மு.கா. கிழக்கு தேர்தலில் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட வேண்டும். இல்லையேல் தனித்துப் போட்டியிட வேண்டும் அவ்வாறில்லாது விட்டால் அது தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகமாக போய்விடும் என காட்டமான கருத்தை முன்வைத்திருந்தார்.

    என்னைப் பொறுத்தவரையில் அன்று நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்திருந்தால் கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைத்திருக்கலாம். இருப்பினும் நாம் எடுத்த முடிவில் தூரநோக்கமொன்றிருந்ததை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

    தமிழ் முஸ்லிம் சமூங்களை தமிழ் பேசும் சமூகம் என்பதன் அடிப்படையில் எமது வருங்கால நகர்வுகள் அதற்கான சரியான சூழலில் அமையும் காலம் வெகுதொலைவில் இல்லையென்பதை சிவசிதம்பரத்தின் நினைவுப்பேருரையில் அன்றைய தினம் தெரிவித்திருந்தேன்.

    தெற்கில் இருப்பவர்களுடன் முட்டி மோதிக்கொண்டு நாம் எமது நிலைப்பாடுகளை நிலை நிறுத்துவதற்கு போராடுவதை விடவும் புரிந்துணர்வுடன் சிலவிடயங்களை சாதிப்பதற்கு ஆர்வம் காட்டவேண்டும். சமூகங்களுக்கிடையில் காணப்படும் துருவப்படுத்தலை எதிரொலியாக ஊடகங்கள் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

    தெற்கில் இருப்பவர்களின் மனப்பாங்கை வெல்வற்கு ஜனநாயக ரீதியான போராட்டங்களின் மூலமாக சகல இனங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சமத்துவமானதும், சாத்தியதுமான தீர்வுகளை நோக்கி நகரும் கட்டத்திற்கு எம்மை புடம்போட்டுக் கொள்ளவேண்டும்.

    யுத்தத்திற்கு பின்னரான சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அதனை சாத்தியப்படுத்துவது குறித்து பரந்துபட்ட அறிவை வளர்க்கக் கூடிய நிலைமைகளை ஏற்படுத்தவேண்டும். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற நிலையில் தீவிரமானவர்கள் இருதரப்பிலும் இருக்கின்ற நிலையில் நடுநிலையான தீர்வினை எடுப்பதற்கு எமது நிலைப்பாடுகளில் வெற்றி பெறுவதற்கு கடினமாக இருக்கின்ற போதும் அரசியல் ரீதியான இணக்கப்பாடுகளை முன்னெடுப்பதற்கான காலம் கனிந்து வருகின்றது என்பதில் நான் நம்பிக்கையோடு இருக்கின்றேன் என்றார்.

    இதேவேளை அமைச்சர் ஹக்கீமின் கூட்டமைப்புடன் இணைவு தொடர்பிலான கருத்து தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்படுகையில், எமது இரு கட்சிகளும் சேரப்போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை. விரைவில் அந்நிலைமை ஏற்படுவதற்கான காலம் தென்படுகின்றது என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்றார்.

    இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் நீதியரசரும் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டதோடு சிறப்பு அதிதிகளாக இலங்கைக்கான பிரதி இந்தியத் தூதுவர் பீ.குமரன், முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தமிழருவி சிவகுமாரன், விரிவுரையாளர் ஸ்ரீபிரசாந்தன் ஆகியேர் பங்கேற்றதோடு, அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், மதத்தலைவர்கள், இலக்கிய ஆய்வாளர்கள், சமூகவியலாளர்கள், ஊடகவியலாளர்கள், வீரகேசரி நிறுவன ஊழியர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.-TC



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் காங்கிரசும் ரீ.என்.ஏ உறவு ஒரு நாள் கட்டாயம் மலரும்: அமைச்சர் ஹக்கீம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top