.சுலைமான் றாபி;
நிந்தவூர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விளையாட்டுக்
கழகங்களுக்கு இடையில் இடம்பெற்ற அணிக்கு 06 பேர் கொண்ட 05 ஓவர்கள்
மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின்
இறுதிப்போட்டி இன்று (30.03.2014)லகான் மற்றும் ரியல் இம்ரான் அணிகளுக்கு
இடையில் இடம்பெற்றது.
நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற லகான் அணித்தலைவர்
சபீக் களத்தடுப்பினைத் தெரிவு செய்ய, ஆரம்பமாக துருப்பெடுத்தாடிய
நிந்தவூர் ரியல் இம்ரான் அணி 4.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து
50 ஓட்டங்களைப்பெற்றது. இதில் ரியல் இம்றான் சார்பாக ஹக்கீமுல்லாஹ் 16
ஓட்டங்களையும், அணித்தலைவர் ஆரிப் 11 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்து
வீச்சை பொறுத்தவரையில் லகான் அணி சார்பாக றாபி 11 ஓட்டங்களுக்கு 02
விக்கெட்களையும், நாஜித் 04 ஓட்டங்களுக்கு 01 விக்கெட்டினையும்
கைப்பற்றினர்.
இதனைதொடர்ந்து பதிலுக்கு தெருப்பெடுத்தாடிய நிந்தவூர்
லகான் அணியினர் 4.1 பந்து வீச்சு ஓவரில் 03 விக்கெட் இழப்பிற்கு 52
ஓட்டங்களைபெற்று வெற்றி பெற்றனர். அவ்வணி சார்பாக அணித்தலைவர் சபீக் 16
ஓட்டங்களையும், றாபி 14 ஓட்டங்களையும் பெற்று அணியை வெற்றிப்பாதைக்கு
இட்டுச்சென்றனர். இதேவேளை இம்முறை இடம்பெற்ற விளையாட்டுப்போட்டியின்
கிரிக்கெட் போட்டியில் நிந்தவூர் லகான் அணியினர் தொடர்ச்சியாக மூன்றாவது
தடவை சம்பியன் பட்டத்தினை வென்றுள்ளனர். இதேவேளை இம்முறை புதிதாக பதிவு
செய்யப்பட்ட 04 அணிகளில் நிந்தவூர் ரியல் இம்ரான் அணியினர் முதல்தடவையாக
இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தது ஒரு சிறப்பான முயற்சியாகும்.
இதேவேளை இந்த போட்டியில் இன்னும் மீதமாகவுள்ள சகல
போட்டிகளையும் எதிர்வரும் வாரங்களுக்குள் நடாத்தி முடிக்க
உத்தேசித்திருப்பதாக நிந்தவூர் விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம். றசீன்
தெரிவித்தார்.

0 comments:
Post a Comment