எம் .அம்றித்:
வெளியாகியுள்ள
தேர்தல் முடிவுகள் தொடர்பான தகவல்களின் படி மேல் மாகாணத்தில் நடை பெற்று
முடிந்த தேர்தலில் மூன்று மாவட்டத்களில் இருந்தும் மேல் மாகாண சபைக்கு ஏழு முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் இவர்களில் எவரும்
ஆளும் ஐக்கிய சுதந்திர மக்கள் கூட்டமைப்பில் இருந்து தெரிவு செய்யப்
படவில்லை. .
கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில், கடந்த
14 வருடங்களாக பாதுகாத்துவந்த முஸ்லிம் பிரதிநிதித்துவம், இம்முறை தவறிப்
போயுள்ளது .
மேல் மாகாணத்தில் மற்றும் இரு மாவட்டங்களான
ஹம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து தலா ஒருவர் படி இருவர்
தெரிவாகியுள்ளனர் இவர்களில் ஹம்பஹா மாவாட்டத்தில் இருந்து ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒருவரும் களுத்துறையில் இருந்து ஐக்கிய தேசிய
கட்சி சார்பில் ஒருவரும் தெரிவாகியுள்ளனர் .
களுத்துறையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் 12 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றும் ஒருவரையும்
பெற்றுக்கொள்ள முடியாது போயுள்ளது .

0 comments:
Post a Comment