மது போதையில் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செய்த பௌத்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மதுபானம் அருந்திக் கொண்டு அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதாக பௌத்த பிக்கு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.நல்லத்தண்ணீர் இந்திகட்டுபான பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து குறித்த பௌத்த பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அநாகரீகமாக
நடந்து கொண்டமை மற்றும் மதுபானம் அருந்தியமைக்காக குறித்த பௌத்த
பிக்குவிற்கு இரண்டாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாகத்
தெரிவிக்கப்படுகிறது.

0 comments:
Post a Comment