• Latest News

    March 27, 2014

    அடுத்த மனித உரிமைக் கூட்டத் தொடருக்கு முன்பு முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் : ஹக்கீம்

    அஸ்ரப் ஏ சமத்: 
    கொழும்பு மத்திய வீதியில் நடைபெற்று இறுதிக் கூட்டத்தில் அமைசச்ர் ரவுப் ஹக்கீம் ஜெனிவாவில் கடந்த வருடம் மனித உரிமைப்பேரவையில் ஆதரித்த 8 அரபு நாடுகளும் ஏனைய
     7 நாடுகளும் இணைந்து இம்முறையும் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு வாக்களித்து இலங்கையின் ஆதரவாக உள்ளது.
    முஸ்லீம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக இருப்பதனை நாம் கௌரவிக்கின்றோம். கடந்த மனித உரிமைப் பேரவையில் 1 மாத காலம் ஜெனிவாவில் தங்கி நின்று இந்த அரபு நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாகவும் ஜனாதிபதியின் செய்தியை சொல்லியவன் என்ற ரீதியில் இதனை ஞாபக
    முட்டவிரும்புகின்றேன்.  என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
    அடுத்த  மனித உரிமைக் கூட்டத்தொடருக்கு முன்பு முஸ்லிம்களுக்கு எதிரான  பிரச்சினைகள் யாவும்  தீர்க்கப்படவேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் முஸ்லிம்களின் பிரச்சினைகளை சம்பந்தமாக சர்வதேசத்திற்கு மீள கொண்டு செல்லவேண்டி ஏற்படும்.என ஹகீம் தெரிவித்தார் .
    ஸ்ரீ.ல. முஸ்லிம் காங்கிரசின் இறுதி தேர்தல் பிரச்சார கூட்டம்  கொழும்பு மத்திய வீதியில் நடைபெற்றது. இக்  கூட்டத்தில கலந்து கொண்டு; முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
    இறுதிக் கூட்டத்தை நடத்துவதற்கு பொலிசார் இடை நிறுத்துமாறு உத்தரவிட்டனர். அங்கு வருகை தந்த பொலிசார் இரவு 10..30 மணிக்கு தங்களுக்கு லவுஸ் பீக்கர் பாவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உடன் நிறுத்துமாறு தெரிவித்தார். அடிக்கடி  பொலிசார் இடைஞ்சலை ஏற்படுத்தினர்.
    கல்முனை மேயர் நிசாம் காரியப்பர் மீண்டும் லவுஸ் பீக்கரை போடும்படியும்  தெரிவித்து  உரையாற்றினார். அவரது உரையில் இந்த நாட்டின் ஜனாதிபதிக்கு மீளவும் ஜனாதிபதியாக வருவதற்கு தேர்தலில் குதிப்பதற்கும் வேட்பு மனு வாங்கிக் கொடுத்தது இ;ந்த முஸ்லிம் காங்கிரசின் 8 பாராளுமன்ற  உறுப்பினர்களும்தான்.  பாராளுமன்றத்தில் மீள ஜனாதிபதியாக கேட்பதற்கு 18 வது அரசியல் சர்த்துக்கு ஆதரவாக நாங்கள்  வாக்களித்துள்ளோம். இதனை இந்த ஜனாதிபதி நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். இங்கு 12.00 மணிவரையும் மக்கள் காத்திற்கொண்டு முஸ்லிம்கள் அணிதிரண்டு நிற்பதை அறிந்து  அதனை பொறுக்கமுடியாதவர்கள் பொலிசாரைக்கொண்டு லவுஸ் பீக்கர் காரணத்தை வைத்துக்கொண்டு கூட்டத்தை குழப்புகின்ற்னர். அரசின் உயர்மட்டத்திற்கு சி.ஜ.டி அறிக்கை தற்பொழுது போகியிருக்கும் என நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
    மீள பாராளுமன்ற பைசால் காசீம் பேசும்போது  பொலிசார் லவுஸ் பீக்கரை நிறுத்திவிட்டனர். 11.30 மணிக்கு தலைவர் ரவுப் ஹக்கீம் அங்கு  வந்தபோது வாக்குவாதத்தில் பொலிசார் ஈடுபட்டனர். மீள லவுஸ் பீக்கர் பாவிக்கப்பட்டு 15 நிமிடம்வரை றவுப் ஹக்கீம் உரையாற்றினார்.
    அவர் தேர்தல் ஆணையாளரின் விதிப்படி இறுதி  நாள்  பிரச்சாரம் 12.00 மணிவரை நடைபெறுவதற்கு முடியும். எனவும் அருகில் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமாணினதும் புதுக்கடையில் றிசாத் பதியுத்தீன் ஆகியோர்களது மேலும் அரச பொதுக் கூட்டங்கள்  நடைபெறுவதாகவும் தெரிவித்தார். இந்தப் பொலிஸ் அதிகாரிக்கு எதிராகவும் எமது கட்சிக் கூட்டத்தை குழப்பியதற்காக மணித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்படுமெனவும்  ஹக்கீம் கூறினார்.
    அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகண சபைத் தேர்தல் போன்று மேல் மாகாணத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் 7 உறுப்பினர்களை பெறும்.   .அம்பாறை மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்  சனத்தொகையை போன்றே  கொழும்பு மாவட்டத்திலும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர் 4 உறுப்பிணர்களாவது வெற்றிபெறவேண்டும்  எனவும் ஹக்கீம் தெரிவித்தார்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அடுத்த மனித உரிமைக் கூட்டத் தொடருக்கு முன்பு முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் : ஹக்கீம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top