ஜெனிவா
மனித உரிமை பேரவையில் தெரிந்தே தோல்வியடைந்த அரசாங்கத்தின் முதலை
கண்ணீருக்கு ஏமாற வேண்டாம் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின்
சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜெனிவா மனித
உரிமை பேரவையில் அரசாங்கம் தெரிந்தே தோல்வியடந்துள்ளதுடன் அதனை பயன்படுத்தி
தேர்தலில் வெற்றிபெற முயற்சித்து வருகிறது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா
கொண்டு வந்த பிரேரணையை அமெரிக்காவே வெற்றியடைய செய்துள்ளது. இலங்கை
தோல்வியடைந்துள்ளது.
ஏகாதிபத்திய நாடுகளின் தலையிடு தவறு என்பது
போலவே இன்றைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது. இதனால்
இரண்டு தரப்பை ஒரு பக்கம் வைத்து ஆராய வேண்டும். இலங்கைக்கு எதிரான
பிரேணைக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டை வெற்றிப்பெற செய்ய
அரசாங்கம் தவறியுள்ளது.
சர்வதேச தளத்தில் வெற்றியை பெற
அரசாங்கத்திற்கு முடியாமல் போயுள்ளது. நாட்டை சர்வதேச தளத்தில் அரசாங்கம்
அசௌகரியத்திற்கு உட்படுத்தியுள்ளது. இது முதல் முறையல்ல. இதற்கு முன்னரும்
ஜெனிவாவில் இலங்கை தோல்வியடைந்தது. ஜெனிவா பிரேரணையை தோற்கடிப்பதற்கு
பதிலாக அரசாங்கம் மிகவும் கீழ்த்தரமான வகையில் அதனை அரசியலுக்கு
பயன்படுத்தியுள்ளது என்றார்.-TC

0 comments:
Post a Comment