29 ஆம் திகதி நடைபெறவுள்ள மேல், தென் மாகாண
சபைகளுக்கான தேர்தல்களின் போது முஸ்லிம்கள் தமது வாக்குரிமையை முழுமையாகப்
பயன்படுத்த வேண்டுமென முஸ்லிம்
இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா கோரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்கத் தீர்மானங்களை எடுப்பதில் ஒரு
தனிநபருக்குச் செல்வாக்குச் செலுத்தக் கூடிய முக்கியமான வழிமுறை
வாக்களிப்பாகும். மக்கள் அரசாங்க நடவடிக்கைகளில் பங்குபற்றக் கிடைக்கும்
ஒரே சந்தர்ப்பம் வாக்களிப்பு முறையாகும்.
எனவே, முஸ்லிம் கவுன்ஸில் இந்த
மாகாணங்களிலிலுள்ள முஸ்லிம்களை தமது வாக்குகளை செலுத்தி, தாம் விரும்பும்
கட்சிக்கோ அல்லது குழுக்களுக்கோ, அபேட்சகர்களை முன்நிறுத்தி தனது வாக்கு
உரிமைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நாம் எமது வாக்குகளைப் பயன்படுத்தி
விரும்பிய உறுப்பினர்களை தெரிவு செய்வதன் மூலம் உரிய இடங்களில் எமது
பிரச்சினைகளை எழுப்பி தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள உதவும் என்றும் முஸ்லிம்
கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முஸ்லிம்கள் அனைவரும் க வாக்களிக்குமாறு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்
ஜனநாயக நாட்டில் தேர்தல்களில் வாக்களிப்பது
என்பது இஸ்லாம் தடை செய்யாத, அனுமதித்த ஜனநாயக ரீதியிலான நமது உரிமையை
பாதுகாக்கும் ஒரு செயல்பாடாகும்.
அந்த வகையில் இலங்கையின் மேல், தென் மாகாண
சபைகளுக்காக நாளை மறுநாள் 29.03.2014(சனிக்கிழமை) தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் முஸ்லிம்கள் அனைவரும் தங்களுடைய ஜனநாயக உரிமையை பாதுகாக்கும்
விஷயத்தில் கண்டிப்பாக வாக்களிக்குமாறு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில்
அன்பாய் வேண்டுகின்றோம்.
நாம் வாக்களிக்க இருக்கும் கட்சியை அல்லது வேட்பாளரை தேர்வு செய்வதில் மூன்று விஷயங்களை முஸ்லிம்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.
1. நாம் வாக்களிக்கும் கட்சி அல்லது வேட்பாளர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
2. அதே போல் நாம் வாக்களிக்கும் கட்சிக்கு,
வேட்பாளருக்கு தாம் ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் பட்சத்தில் சட்ட
ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பை சரிவர நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை
நமக்கு இருக்க வேண்டும்.
3. அது போல் நாம் வாக்களிக்கும் கட்சி, வேட்பாளர் தீமைகளை தடுக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
வாக்களிப்பதற்கு முன்பதாக நாம் வாக்களிக்கும் கட்சி, வேட்பாளர் இந்த நிலையில் இருக்கின்றாரா? என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும்.
தேர்தல்களில் முஸ்லிம்கள் வாக்களிக்காமல்
இருப்பது நமது உரிமைகளை நாமே விட்டுக் கொடுப்பதுமட்டுமன்றி ஓரளவுக்கேனும்
சமுதாயத்திற்காக குரல் கொடுப்பவர்களை நாமே இல்லாமலாக்குவாகிவிடும்.
ஆகவே தற்போதைய நாட்டு சூழலில் முஸ்லிம்கள்
அனைவரும் ஏதாவது ஒரு கட்சிக்கு நமது வாக்குகளை அளிப்பதின் மூலம் முஸ்லிம்
உம்மத்தின் எதிர்கால உரிமையை வென்றெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்பாய்
வேண்டுகின்றோம்.

0 comments:
Post a Comment