ஹிஜாப்பை
அணியவேண்டாமென இரண்டு முஸ்லிம் பாடசாலை மாணவிகள் வற்புறுத்தப்பட்டமைக்கு
எதிராக முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி பொலிஸில்
முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பான தகவல்களை சேரித்து அதன் பிறகு, பாடசாலை அதிகாரிகள்
மற்றும் நாட்டில் அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கும் குழுக்களுக்கு எதிராக
பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதாக அசாத் சாலி தெரிவித்தார்.
உள்நாட்டுச் சட்டத்தின் படி முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும் ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள ஒரு பாடசாலை முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய கடந்த வாரம் தடைவிதித்தது.
வகுப்பில் அனுமதிக்க வேண்டுமாயின் மாணவிகள் ஹிஜாப்பை கழற்ற வேண்டும் என அந்த பாடசாலையின் அதிபர் வற்புறுத்தியதாக செய்திகள் வெளியாகி இருந்தன.