• Latest News

    March 12, 2014

    மாணவியின் ஹிஜாப் : அமைச்சர் றிஷாத் வழக்கு பதிவு செய்துள்ளார் ?

    அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த முஸ்லீம்கள் 800 பேர் கலந்து கொண்ட கூட்டம் நேற்று இரவு வெள்ளவத்தை மெரைன் ரைவ் ஹோட்டலில் நடைபெற்றது.  இந் நிகழ்வுக்கு கட்சியின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் கலந்து கொண்டு உரையாற்றினார். தெஹிவளைப்பிரதேச வேற்பாளர்கள்  நவாஸ் முஸ்தபா, இப்திகார், பாயிஸ், தன்சீர் கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீட் ஆகியோரும் உரையாற்றினார்கள். இங்கு உரையாற்றிய அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவித்தாவது,

    இன்று  தெஹிவளை பிரதேசத்தில் உள்ளதொரு முஸ்லீம்  பாடசாலையை கட்டியெழுப்புவதற்கு இன்று இப்பிரதேச மக்களின் அழைப்பின் பேரில் அங்கு சென்று அக் கல்லூரியின் கட்டியெழுப்புவதற்கு தான் விஜயம் செய்தாகவும் குறிப்பிட்டார். கோட்டைப்பகுதியில் உள்ள பாடாசலையில் உள்ள மகளிர் கல்லூரியின் பெண் அதிபர் ஒருவர் முஸ்லீம் மாணவியொருவரின் பர்தாவை கலற்றி தன்னை கைகூம்பி கும்பிட செய்தமைக்கு வழக்கு ஒன்றினை தாக்குதல் செய்வதாகவும் குறிப்பிட்டார்.

    தெஹிவளை கடவத்தை வீதிப் பள்ளிவாசல் தீர்ப்புக்காக தான் தீர்ப்பை எதிர்பார்த்து கடந்த வெள்ளிக்கிழமை நுகேகொட நீதிமன்றத்தில் அங்கு சென்று அங்கு உட்காந்திருந்தபோது அப்பள்ளியின் நிருவாக உருப்பினர்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைத்தஉடன் அந் தருணத்தில் நிருவாகத்தினர்க்கு   கண்கலங்கிய நிலைமையை நான் நிணைத்து பார்க்கின்றேன். இவ்வாறு எமது உரிமைகளை நாம் சட்டரீதியாக பெற்றுக்கொள்வதற்கு நாம் ஒருபோதும் தயங்கக் கூடாது.

    வடக்கில் வாழ்ந்த 1 இலட்சம் முஸ்லீம்களது மீளகுடியமர்த்தும் திட்டம் அவர்களது 20ஆயிரம் வீடுகள், 70 பள்ளிவாசல்கள்,60 பாடசாலைகள் ஆகியன மீள கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. அங்கு வாழ்ந்த மக்களை மீளக்குடியேற்றும் பொறுப்பு தங்களுக்கு உள்ளது. இந் தருணத்தில் இந்த அரசில் இருந்து வெளியேறிச் இவைகளை செய்ய முடியுமா? அதே போன்றுகொழும்பு மாவட்டத்தில் வாழும் முஸ்லீம்களது இருப்புக்கள், பாடசாலைகள், மத ஸ்தாபணங்கள் ஆகியன கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. அதற்காக தங்களது பிரதிநிதிகளை தெரிபுசெய்யுங்கள். அதற்காகவே நாங்கள் கொழும்பில் போட்டியிடுகின்றோம்.  

    அண்மைக்காலமாக நடைபெற்ற கிராண்பாஸ் பள்ளிவாசல், தெஹிவளை பள்ளிவாசல், பெசன்பக் நிலையம் தாக்குதல் போன்ற இடங்களில் நடைபெற்ற கலவரங்களுக்குச் சென்றால் எங்களைப் பார்த்து இப்பிரதேச அரசியல்வாதிகள் தங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது கொழும்பில் உள்ள பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்  நீங்கள் உங்களது வண்னியைப் பார்த்துக்கொள்ளுங்கள் என எங்களிடம விரலை நீட்டுகின்றனர்? இப்பிரதேச மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் இவ் விடயங்களின் கரிசனை செலுத்த வில்லை. அதற்காகவே நாங்கள் முதல் தடவையாக கொழும்பு மாவட்டத்தில் மயில் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். தங்களுக்கு 4 -5 பிரதிநிதிகளை தாருங்கள். அதன் பின்னர் நாங்கள் தலைநிமிர்ந்து நெஞ்சை உயர்த்தி இந்த நாட்டின் ஜனாதிபதியிடமோ அல்லது வேறு எவரிடமோ கொழும்பு வாழ் பிரதேசங்களின் பிரச்சினைகளைத் முன்கொண்டு  தீர்க்கமுடியும். இந்த நாட்டில் வாழும் 20 இலட்சம் முஸ்லீம்களும் 2ஆயிரம் பள்ளிவாசல்களும் 2ஆயிரம் பாடசாலைகளையும்  யார் பாதுகாப்பதது ? இவர்களைப் பற்றி எந்த அரசியல்வாதிகள் சிந்திக்கின்றார்கள்.  இவர்களது இருப்புக்கள், மத ஸ்தாபணம் கல்வி மற்றும்  கலாச்சாரம் வியாபாரம், உடை, உணவு என்பவற்றை யார் பாதுகாப்பது?  இவர்களுக்காக எதர்வது திட்டம்கள் உள்ளனவா ?

    வடக்கில் பயங்கரவாதிகலாள் முஸ்லீம்களுக்கு பாரிய பாதிப்புக்களும் அழிவுகளும் இடம்பெற்றன ? அவற்றை மீளக்கட்டியெழுப்ப்போனால் ரீ.என்.ஏ கட்சியினர் அபாண்டமான குற்றங்களை சுமற்றி எங்களுக்கு எதிராக ஆர்ப்படாட்மும் மற்றம் இடைஞ்சல்களையும் ஏற்படுத்துகின்றனர்.  கொழும்பில்  பொதுபலசேன, சிகல உருமைய, சிங்கள ராவய, ராவணபலய என அதிதீவிர போக்குடைய இயக்கங்களது அட்டகாசம் தலைவிரித்தாடுகின்றது. தற்பொழுது ஒரு மாதகலாமாக தேர்தல் நடைபெறுவதாலும் ஜெனிவாபிர்சினை நடைபெறுவதாலும் மௌணமாக உள்ளனர்.   முஸ்லீம்களது உடைகள், பள்ளிவாசல்கள், ஹலால் உணவு வியாபார ஸ்தாபணங்கள் போன்றவற்றில் இனத்துவேசத்தை கிளப்பி பௌத்த மக்களை எங்களுக்கு எதிhக கிளப்பிவிடுகின்றனர்.

    ஆகவேதான் நாம் ஒர் அச்சம்கொண்ட சமுகமாக இந்த நாட்டில் வாழக்கூடாது? தலைநிமிர்ந்த சமுகமாக நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.  இந்த நாட்டை முஸ்லீம்கள் ஒருபோதும் காட்டிக் கொடுத்து கிடையாது. முன்னாள் அரசியல்வாதிகளான  ரீ.பி ஜாயா, டொக்டர் கலீல், சேர் ராசீக் பரீட், தொட்டு எம்.எச்.எம் அஸ்ரப் வரையிலான அரசியல்வாதிகள் இந்த நாட்டின் நன்மைக்கும் இன ஜக்கியத்திற்குமாக ஏனைய சமுகங்களின் சமாதாண பாலமாக இருந்து வந்துள்ளார்கள்.  அன்று வட கிழக்கில் நடைபெற்ற யுத்தத்தின்போது ஒருபோதும் தமிழ் ஈழத்திற்காக முஸ்லீம்கள் இணையவி;ல்லை அதற்காக மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஸ்ரப் கட்சியொன்றை ஆரம்பித்து முஸ்லீம்களை காப்பாற்றினார்கள்.

    கொழும்பில் வாழும் முஸ்லீம்களது கல்வித்துறை பெரிதும் பின்தங்கிய நிலையில் உள்ளன.  ஏனைய பிரதேசங்களான தெமட்டக்கொட கொம்பணிவீதி, மாளிகாவத்தை, மருதாணை பிரதேசங்களில் வாழும் முஸ்லீம்கள் பெரிதும் பின்தங்கியவர்களாகவும வருமைக்கோட்டின் கீழ்  வாழ்கின்றனர்.  அம் மக்கள் முடுக்குகளிலேயே வாழ்கின்றனர். என அமைச்சர் றிசாத்பதியுத்தீன் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாணவியின் ஹிஜாப் : அமைச்சர் றிஷாத் வழக்கு பதிவு செய்துள்ளார் ? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top