கிரைமீயாவில் உள்ள
”பாராளுமன்றம்”, தமது நாடு உக்ரைய்னில் இருந்து சுதந்திரம் பெற்றதாக
பிரகடனம் செய்து, ரஷ்யாவில் இணைவதற்கும் விண்ணப்பித்துள்ளது. அந்த
வளைகுடாவில் இருக்கும் அனைத்து உக்ரைய்னியர்களின்
சொத்துக்களும் தேசியமயமாக்கப்படுவதாகவும், அந்தப் பிராந்தியத்தில் இனி
உக்ரைய்னியச் சட்டங்கள் செல்லுபடியாகாது என்றும் அது அறிவித்துள்ளது. ஐநா
மற்றும் சர்வதேச சமூகத்துக்கான ஒரு கோரிக்கை ஆவணத்தில், கிரைமீயாவின்
”பாராளுமன்றம்”, தம்மை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்குமாறு கோரியுள்ளது.
மேற்கு நாடுகள் அதிருப்தி
இதற்கிடையே, கிரைமீயா உக்ரைய்னில் இருந்து
பிரிவதற்கு முடிவெடுத்த பின்னணியில், இது தொடர்பில் ரஷ்யா மீது எப்படியான
தடைகளை விதிக்கலாம் என்று ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு
அமைச்சர்கள் பிரஸல்ஸில் கூடுகிறார்கள். ஜேர்மனி ரஷ்யாவிடம் இருந்து
வாங்கும் எரிவாயுவின் அழவைக் குறைக்க வேண்டும் என்று ஜேர்மனியின் அதிகாரி
ஒருவர் தெரிவித்துள்ளார். கிரைமீய மக்கள் கருத்தறியும் வாக்களிப்பை சட்ட
விரோதமானதாகப் பார்க்கும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் அதற்கான
பதிலடி குறித்து ஆராய்கின்றன.