எம்.வை.அமீர்;
இன்று அதிகாலை சாய்ந்தமருது 10ம் பிரிவிலுள்ள தோணாவுக்கு அருகில் செல்லும் வீதியின் மத்தியில்
மாட்டின் கழிவுகளுடன் கூடிய எலும்புகள் வீசப்பட்டுள்ளன.
நுற்றுக்கணக்கான பாதசாரிகளும் வாகனங்களும்
பிரயாணிக்கும் இவ்வீதியில் அதுவும் இவ்வீதியை அண்டிய பகுதியில் மக்கள்
குடியிருப்புகள் இருக்கின்ற போதிலும் நாகரிகமற்ற சிலரால் இவ்வாறான செயற்பாடுகள்
செய்யப்படுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.
இறைவனின் நற்பொருத்தத்துக்காக பணங்களை
செலவுசெய்து மாடுகளை அறுப்போர் மிகுந்த அவதானங்களை கடைப்பிடிக்க வேண்டிய
நிலையிலும் இவ்வாறான கீழ்த்தரமான செயல்களினால் பணத்தைக்கொடுத்து தீமையை
வாங்கிக்கொள்ளும் நிலைக்கு உள்ளாகின்றார்கள். இஸ்லாம் சுத்தத்துக்கு மிகுந்த
முக்கியத்துவம் கொடுத்து சுத்தம் ஈமானின் பாதி என்றும் கூறியுள்ள நிலையில் இவ்வாறான
செயல்களில் ஈடுபடுவோரை இஸ்லாமியர்கள் என்ற வரம்பை விட்டே யோசிக்க வேண்டியுள்ளது.
நாகரிகமற்ற செயற்பாடுகளை நாங்களே செய்து
விட்டு அரசாங்கத்தையோ அல்லது மாநகரசபையையோ குற்றம் கூறுவதில் அறுத்தமில்லை.
நாகரீகமடைந்தவர்கள் என்று
மார்தட்டிக்கொள்ளும் எம்மவர்களுக்கு குத்பா பிரசங்கங்களிலும் ஏனைய நிகழ்வுகளிலும் இவ்வாறான
கண்டிக்கத்தக்க செயற்பாடுகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் இஸ்லாத்தின்
பார்வையில் அறிவுறுத்த வேண்டியுள்ளது. அத்துடன் மாநகரசபையும் இவ்வாறான
கழிவுகளையும் ஏனைய கழிவுகளையும் எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்ற விழிப்புணர்வை
மக்களுக்கு வழங்க வேண்டும். கல்முனை மாநகரசபை தின்மக்களிவு முகாமைத்துவம் சம்மந்தமாக
சிந்தித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் மக்கள் மத்தியில் இவ்வாறான
நடைமுறைகளுக்கும் முன்னுரிமை வழங்கவேண்டும். இதனுடாக நள்ளிரவு வேளையில் தங்களது
கழிவுகளை இரகசியமாக தோணா போன்ற இடங்களிலும் ஏனைய இடங்களிலும் வீசுவோரை கட்டுப்படுத்த
வேண்டும். பின்னர் மாநகரசபை சட்டங்களை மீறுவோரை தராதரம்பாராது தண்டிக்க வேண்டும்.
மாநகரசபை, கழிவுகளை சேகரிப்பதற்காக கழிவுகள்
அதிகம் சேரும் இடங்களை இனம்கண்டு விசேடமான நடைமுறையின் ஊடாக தினமும் அவைகளை
அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.
கல்முனை மாநகரசபையின் முதல்வர் இவ்வாறான
விடையத்தில் உடனடியாக தலையிட்டு காத்திரமான நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்.
மக்கள் மற்றவர்களின் உணர்வுகளையும் மதித்து
தங்களால் வீசப்படும் கழிவுகளால் மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை
உணராதவரையில் சாய்ந்தமருதுக்கு என்ன ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிக்கும் பிரதேசசபை
வழங்கினாலும் கோரப்படும் பிரதேச சபையினால் பலன்கிட்டப்போவதில்லை.


0 comments:
Post a Comment