ஏ.ஜே.எம்.ஹனீபா;
ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸீல் ராஜபக்ஷ அவர்களின் நேரடி பங்களிப்போடு உதயமான திவிநெகும திணைக்களம் அதன் ஆரம்பத்தின் பின்னர் முதலாவதாக நடைபெற்ற மாவட்ட சமுர்த்தி வங்கி மகாசங்க கண்காணிப்பு அதிகாரிகளுக்கான முன்னேற்ற மீளாய்வு மாநாடு கடந்த 13ம் திகதி ஆரம்பமாகி நேற்று வரைக்கம் மூன்று தினங்களாக பெலவத்தை பத்தரமுல்லை 'சிட்ரெக்' நிறுவனத்தில் திவிநெகம சமுதாய அபிவிருத்தி வங்கி மகாசங்க பிரிவின் பணிப்பாளர் திரு சந்திரதிலக தலைமையில் நடைபெற்றது.

பணிப்பாளர் திரு சந்திரதிலக உரையாற்றுகையில் இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் கீழ் 2010ம் அண்டு உருவாக்கப்பட்ட வங்கி மகாசங்க கண்;காணிப்பு பிரிவின் செயற்பாடுகள் 2012ம் ஆண்டு தேசிய ரீதியில் வியாபிக்கப்பட்டதன் மூலம் பாரிய முன்னேற்ற செயற்பாடுகளை அடைந்துள்ளது. சமுர்த்தி வங்கி மற்றும் மகாசங்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதனை நெறிப்படத்துவதற்கான கையளுவதற்கான தனியான சுற்று நிருபங்களும் தனிப்பிரிவுகள் இருந்தும் ஆரம்ப காலகட்டத்தில் எமது நாட்டில் நிலவிய சீரற்ற நிலைமை காரனமாக சில பிரதேசங்களில் முறையற்ற நடைமுறைகள் கையாளப்பட்டு மோசடிகள், துஷ;பிரயோகங்கள் நடைபெற்று வந்துள்ளது.
இன்று தேசிய மட்டத்தில் சகல மாவட்டங்களிலும் மாவட்ட சமுர்த்தி வங்கி மகாசங்க கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டதை அடுத்து அவர்களின் அற்பணிப்புடனான துரித செயற்பாடுகள் காரணமாக பலதரப்பட்ட பிரச்சினைகள் இணங்கானப்பட்டு அவற்றுக்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எதிர்காலத்தில் வங்கி மற்றும் மகா சங்க செயற்பாடுகளில் மாவட்ட சமுர்த்தி வங்கி மகாசங்க கண்காணிப்பு அதிகாரிகளின் அவதானிப்புக்கள் தொடர்ச்சியான முறையில் இடம் பெறும்.
திவிநெகும திணைக்களத்தின் கீழ் கணக்காய்வு பிரிவு மற்றும் கண்காணிப்பு பிரிவுகளுக்க பாரிய பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டு வினைத்திரன் மிக்க திவிநெகம சமுதாய அபிவிருத்தி வங்கி கெஙற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment