• Latest News

    March 16, 2014

    கப்புவத்தை முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாசலை ஜனாதிபதி திறந்து வைத்தார்

    வெலிகாமம்;
    புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வெலிகாமம், கப்புவத்தை முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாசலைத் திறந்துவைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழில் நேற்று (15.03.2014) உரையாற்றும்போது, புதிதாக புனர்நிர்மாணம் செய்த, இந்த கப்புவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலைத் திறந்துவைக்கக் கிடைத்தது பெரும் பெரும் பாக்கியம். எனக்கு மிகவும் சந்தோசம். நீண்ட காலமாக உள்ள இந்தப் பள்ளிவாசல் உங்கள் ஊருக்கு வரப்பிரசாதமாகும். ரிபாய் தரீக்கா தங்கள் மார்கள் ஆன்மீகத் தலைவர்கள்.. நல்ல பல சேவைகளைச் செய்துள்ளார்கள். இதுதான் உண்மை.. இதுதான் இதிகாசம்… இதை நாங்கள் ஒருநாளும் மறக்கக்கூடாது.

    காத்தான்குடி பள்ளிவாசல் கட்ட அத்திரவாரமிட்டோம்.. நுவரெலிய புதிய பள்ளிவாசல் புனர்நிர்மாணம் செய்தோம்… அளுத்கம சீனாவத்த பள்ளிவாசல் திறந்து வைத்தோம். இன்று இந்த ஜும்ஆப் பள்ளியைத் திறந்துவைத்தேன். இதுவெல்லாம் நான் பெற்ற பாக்கியம்!

    இந்நாட்டில் வாழக்கூடிய முஸ்லிம்கள் அன்றும், இன்றும், என்றும் எமது சகோதர மக்கள்! பள்ளி, கோயில், தோவாலயம், விகாரை எல்லாவற்றையும் நாம் ஒன்றாகவே பார்க்கின்றோம். நான் உங்களைப் பாதுகாக்கின்றேன். இன்று பள்ளிவாசல்களில் ஐந்து நேரமும் பாங்கு சொல்லக்கூடிய முறையை நாங்களே கொண்டு வந்தோம். எங்கள் உறவை இல்லாமற் செய்ய சிலபேர் மோசமான காரியங்கள் செய்கிறார்கள். இனவாதம் பேசி, மதபேதம் பேசி மக்களைக் குழப்புகிறார்கள். அது ஒருபோதும் சாத்தியமாகாது.

    .அகில இலங்கை றிபாய்த் தரீக் சங்கத்தின் ஆன்மீகத் தலைவரும், ஆயுட்கால போசகருமான றிபாய் மௌலானா அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் யூ.பீ. ஸெய்யத் முஹம்மத் ஆசிக் தங்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், விசேட அதிதிகளாக சங்கைக்குரிய ஏ.பீ. ஜாபிர் தங்கள் றிபாய் மௌலானா, மேல்மாகாண ஆளுநர் அஸ்ஸெய்யித் அலவி மௌலானா, சிரேட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். பௌஸி, இளைஞர் விவகார மற்றும் திறன் விருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் அல்ஹாஜ் பைஸர் முஸ்தபா, ஊடக தகவல் அமைச்சின் கண்காணிப்ப உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர், ஜனாதிபதி சட்டத்தரணி அல்ஹாஜ் பாயிஸ் முஸ்தபா கலந்து கொண்டனர்.









    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கப்புவத்தை முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாசலை ஜனாதிபதி திறந்து வைத்தார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top