தலாஹேன - அரலிய பிரதேச கல்வாரி தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகக்
கூறப்படும் வழக்கில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்ட பொது பல சேனா அமைப்பின்
பொதுச் செயலாளர் கலபொடே அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேர் கொழும்பு மேல்
நீதிமன்றத்தால் இன்று (02) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது மேல் நீதிமன்ற
நீதிபதி பத்மினி என் ரணவன சந்தேகநபர்களை விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.
2008 ஜூலை 7ம் திகதி தலாஹேன - அரலிய பிரதேச கல்வாரி தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை, பணம் பறிப்பு, தொலைபேசி களவு, சொத்து சேதம் போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிக்குகள் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(அத தெரண - தமிழ்)

0 comments:
Post a Comment