• Latest News

    April 02, 2014

    இலங்கையிலே நடைபெற்ற அழிவுகளுக்கு பெரும் பங்காற்றியவர்கள் த.தே.கூட்டமைப்பினரே : பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்

    ரவிந்தரன் ;
    இலங்கையிலே சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று கூறினால் அதில் முதன்முதலில் விசாரிக்கப்பட  வேண்டியவர்கள் த.தே.கூட்டமைப்பில் உள்ளவர்களையே விசாரிக்கவேண்டும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவருமாகன விநாயகமூர்த்தி முரளிதரன் கூறினார்.

    கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திட்டமிடல் பிரிவின் அலுவலக திறப்பு விழாவும், வைத்தியசாலை கீதம் வெளியீடும் வைத்தியசாலை அத்தியட்சகர் முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

    இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக  மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், சிறப்பு அதிதியாக களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் சுகுணன், மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், வைத்திய நிபுணர்கள், ஊழியர்கள் என பலரும் கழந்து கொண்டனர்.

    இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர்
    இலங்கையிலே நடைபெற்ற அழிவுகளுக்கு மிகவும் பெரும் பங்காற்றியவர்கள் இன்று த.தே.கூட்டமைப்பில் இருக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களுமே அனைத்து அழிவுகளுக்கும் காரணம்.

    இந்திய படை இலங்கைக்கு வந்தபோது அதனோடு சேர்ந்து எமது இனத்தினை கொன்றொழித்ததில் இவர்களுக்கு பெரும் பங்கு உண்டு இப்படிப்பட்டவர்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது சர்வதேச விசாரணை ஒன்றினை கோருவதற்கு.
    ii 
    இவர்கள் புனிதமானவர்கள் என்றால் அவர்கள் சர்வதேச விசாரணையைக் கோராலாம் அன்று மண்டையன் குழு என்று தங்களை அடையாளப்படுத்தி தமிழ், முஸ்லிம்மக்களை  கொன்றொழித்தவர்கள் இன்று த.தே.கூட்டமைப்பென்ற பெயரில் பாராளுமன்றத்தில் ஆசனங்களை அலங்கரிக்கின்றார்கள்.
    jhk 
    அரசாங்கம் என்பது மக்கள் சக்தி கொண்ட அமைப்பு யார் அரசாங்கத்திற்கு சக்தியைக்கொடுக்கின்றார்களோ அவர்களுக்குத்தான் அரசாங்கம்  உதவி செய்யும் அதனைவிடுத்து சக்தியை கொடுக்காதவர்களுக்கு எப்படி உதவி செய்யமுடியும் என்பதனை நீங்கள் அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.
    முஸ்லிம் மக்கள் இந்த நாட்டு ஜனாதிபதிக்கு தங்களது முழு ஆதரவினையும் வழங்குகின்றார்கள் ஆனால் தமிழர்களோ 100 வீதம் எதிர்ப்பினையே காட்டி வருகின்றார்கள் அப்படி இருக்கும் போது எப்படி அவரிடம் சென்று உதவி கேட்க முடியும்.
    இலங்கையிலே 4 தமிழர்கள்தான் அமைசர்களாக இருக்கின்றார்கள் அதில் ஒருவனாக நான் இருக்கின்றேன் நான் பலமான அமைச்சராகத்தான் இருந்து வருகின்றேன் என்னை சிறந்தமுறையில் பயன்படுத்தினால் நீங்கள் அடையவேண்டிய அனைத்தையும் அடையலாம்.
    நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் உபதலைவராக இருப்பதன் காரணத்தினால் அடிக்கடி ஜனாதிபதியினை சந்தித்து கலந்துரையாடுவேன் அப்போது எமது பிரச்சனைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்து அதற்கான தீர்வினையும் பெற்றுக்கொள்ள முடியும்.

    30வருட காலப்போராட்டத்தில் மூன்று இனங்களும் வெகுவாகப்பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள் இந்த யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வந்ததன்மூலம் இன்று எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன.

    வாழ்க்கைக்காகத்தான் நான் போராடச்சென்றிருந்தேன் ஆனால் போராட்டமே வாழ்க்கையாக மாறிவிட்டது இதன்மூலம் எத்தனையோ தாய்மார்கள் 1000க்கணக்கில் தங்களது பிள்ளைகளை இழந்திருக்கின்றார்கள் இவர்களுக்கெல்லாம் தற்போது விடிவு கிடைத்திருக்கின்றது அதன்மூலம் அவர்கள் இன்று அமைதியான வாழ்க்கை வாழ்கின்றார்கள்.

    நாம் ஒவ்வொருவரும் 30வருட காலத்திற்கும் முற்பட்ட அரசியலை சிந்திக்கவேண்டி இருக்கின்றது அப்போதுதன் நாம் சரியான இலக்கை நோக்கி பயணிக்கமுடியும் அந்தக்காலத்தில் தமிழர்கள் எத்தனையோ பேர் அமச்சர்களாக இருந்திருக்கின்றார்கள் அதனை கருத்தில் கொண்டு இன்று செயற்பட வேண்டிய காலம் வந்திருக்கின்றது.

    கல்விதான் எமது சொத்து அதனை முன்னேற்றுவதற்காகத்தான் அயராது பாடுபட்டு உழைத்துக்கொண்டு வருகின்றேன் யுத்தத்தினால் அதிகமானவற்றை இழந்திருக்கின்றோம் இனிவரும் காலங்கிலும் கல்வியை அழியாமல் பாதுகாக்க அனைவரும் முன்னின்று உழைக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதுடன் இதன்போது இவ்வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவும் கட்டிட வசதிகள், தொழிநுட்ப வசதிகள், ஊழியர் குறைபாடுகள் அனைத்திற்கும் மிகவிரைவில் தீர்வுகள் பெற்று அவற்றை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதியளித்தார்.
    lll 
    loo 
    tt
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையிலே நடைபெற்ற அழிவுகளுக்கு பெரும் பங்காற்றியவர்கள் த.தே.கூட்டமைப்பினரே : பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top