• Latest News

    April 05, 2014

    க.பொ.த உயர்தரம் கற்க 1,76,534 மாணவர்கள் தகுதி - 5737 பேர் 9 பாடங்களிலும் 'ஏ' சித்தி - 9444 பேர் எந்தவொரு பாடத்திலும் சித்தியில்லை.

    க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு கடந்த 2013ஆம் ஆண்டு தோற்றிய மாணவர்களில் 66.67 வீதமானவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

    176,534 மாணவர்கள் இவ்வாறு தகுதி பெற்றிருப்பதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இவர்களில் 5737 பேர் ஒன்பது பாடங்களிலும் 'ஏ' சித்திபெற்றிருப்பதுடன், பரீட்சைக்குத் தோற்றிய 264,772 மாணவர்களில் 9,444 மாணவர்கள் எந்தவொரு பாடத்திலும் சித்திபெறவில்லையென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

    உயர்தரத்திற்கு தகுதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 2016ஆம் ஆண்டில் 75 வீதமாக உயர்த்துவதுடன், எந்தவொரு பாடத்திலும் சித்தி பெறத் தவறும் மாணவர்களின் எண்ணிக்கையை ஒரு வீதமாகக் குறைப்பதுமே அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித் தார்.

    கல்வியமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

    கல்வி அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, பரீட்சைகள் ஆணையாளர் புஷ்பகுமார ஆகியோரும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.
     
    கொழும்பு 8 தேவி பாலிகா மகா வித்தியாலயம் கூடுதலான பெறுபேறுகளைப் பெற்று முதலாவது இடத்தைப் பெற்றுள்ளது.

    இந்தப் பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய 245 மாணவியர்களில் 124 மாணவியர் 9 'ஏ' சித்திகளைப் பெற்றிருப்பதுடன், 83 வீதமானவர்கள் 8 'ஏ' ற்கும் கூடுதலான புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

    இந்தப் பாடசாலையில் எந்தவொரு மாணவியும் எந்தவொரு பரீட்சையிலும் தோற்றத் தவறவில்லையென கல்வியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

    இரண்டாவது இடத்தில் கம்பஹா ரத்னாவளி பாலிகா மகா வித்தியாலயமும்,

    மூன்றாவது இடத்தில் மாத்தளை அரச விஞ்ஞானக் கல்லூரியும்,

    நான்காவது இடத்தில் கொழும்பு விசாகா மகளிர் மகா வித்தியாலயமும் காணப்படுகின்றன.
     
    க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளில் சிறந்த பெறுபேறுகளைக் கொண்ட பாடசாலைகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஐந்தாவது இடம்பெற்றுள்ளது.

    இந்தப் பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய 246 மாணவியர்களில் அநேகமானவர்கள் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடைந்துள்ளனர்.
     
    சிறந்த பெறுபேறுகளை வழங்கிய பாடசாலைகளின் பட்டியலில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 24வது இடத்தில் காணப்படுகிறது.

    மட்டக்களப்பு வின்சன்ட் பெண்கள் பாடசாலை 44வது இடத்திலும் காணப்படுகிறது.





     

     

    ஆயிரக்கணக்கான கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இயக்க பணிகளை சீனாவுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
    அனல் மின் நிலையத்தை சீனாவுக்கு வழங்கும் உடன்படிக்கையில் இரு நாடுகளும் கையெழுத்திட உள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.
    இலங்கை மின்சார சபையின் மின் பொறியிலாளர்களின் ஊழல், முறைகேடுகள் மற்றும் மின்சார சபையின் தன்னிச்சையான நிர்வாக முடிவுகள் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட அழிவுகளுக்கு காரணம் என்பதால், அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
    இதனடிப்படையில், நுரைசோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாட்டுப் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு சீனா பொறியிலாளர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
    அத்துடன் மின் நிலையத்தின் பணியாளர்களாகவும் சீனர்களே நியமிக்கப்பட உள்ளனர்.
    எவ்வாறாயினும் கொடுப்பனவுகள் உள்ளிட்ட செலவுகளை வழங்கும் பொறுப்பு இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட உள்ளது.
    இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று இலங்கை மின்சார சபைக்கும், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை நிர்மாணித்த சீன மெஷிநெறி நிறுவனத்திற்கும் இடையில் கையெழுத்திடப்பட உள்ளது.
    சீனாவிடம் இருந்த பெறப்பட்ட கடனுதவியுடன் சீன பொறியிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களை கொண்டே இந்த மின் நிலையம் நிர்மாணிக்கப்படடது.
    மின் நிலையத்தின் இயந்திரங்களில் அடிக்கடி கோளாறுகள் ஏற்பட்ட நிலையில், மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்வது பாதிக்கப்பட்டது.
    மின் நிலையத்தை நிர்மாணித்த சீன நிறுவனம் பழைய இயந்திரங்களை கொண்டே இந்த மின் நிலையத்தை நிர்மாணித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
    - See more at: http://www.newstamilwin.com/show-RUmsyETZLWfv2.html#sthash.IQWQWOji.dpuf
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: க.பொ.த உயர்தரம் கற்க 1,76,534 மாணவர்கள் தகுதி - 5737 பேர் 9 பாடங்களிலும் 'ஏ' சித்தி - 9444 பேர் எந்தவொரு பாடத்திலும் சித்தியில்லை. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top