• Latest News

    April 05, 2014

    அரசாங்கத்தின் தேர்தல் திட்டங்கள் சிக்கல்கள்

    அரசாங்கம் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரை இலக்கு வைத்து நடத்த திட்டமிட்டிருந்த ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளது.

    மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சியின் பின்னடைவை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.

    அதேவேளை ஊவா மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
    நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலை விட ஊவா மாகாண சபைத் தேர்தலில் மேலும் பின்னடைவு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறான நிலைமையில், ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால், பொது வேட்பாளரை களத்தில் இறக்குவது என எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

    எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தும் சந்தர்ப்பத்தில், அரசாங்கத்தில் இருக்கும் சில கட்சிகள் எதிரணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த கட்சிகளை தவிர அரசாங்கத்திற்குள் இருக்கும் ராஜபக்ஷ குடும்ப ஆட்சியினால் வெறுப்படைந்துள்ள சில சிரேஷ்ட அமைச்சர்களும் எதிரணியில் இணையும் ஆபத்து இருப்பதாக அரசாங்கம் கருதி வருகிறது.

    இவ்வாறான நிலைமையில், அரசாங்கத்தின் தேர்தல் திட்டங்கள் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.

    ஊவா மாகாண சபையின் பதவிக் காலம் முடிவடையவுள்ளதுடன் எதிர்வரும் செப்டம்பருக்குள் அந்த மாகாணத்திற்கான தேர்தலை நடத்தியாக வேண்டும்.

    இதன் காரணமாக அந்த மாகாணத்திற்கான தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

    இவ்வாறான சூழ்நிலையில், ஜனாதிபதித் தேர்தல் குறித்து முடிவெடுப்பதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்பு வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரசாங்கத்தின் தேர்தல் திட்டங்கள் சிக்கல்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top