• Latest News

    April 07, 2014

    2014ஆம் ஆண்டில் ஆசிய நாடுகளில் செல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் மஹிந்த ராஜபக்ஷ 34ஆவது இடம்!

    2014ஆம் ஆண்டில் ஆசிய நாடுகளில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 34ஆவது இடத்தை பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. "ஆசியன் அவார்ட்ஸ்" அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் தலைச்சிறந்த 100 ஆசியர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

    இப்பட்டியில், முதலிடத்தை சீன அதிபர் சீ ஜின்பிங்கும் இரண்டாமிடத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிடித்துள்ளனர். இவர்கள் தவிர பா.ஜ.க பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி 4ஆவது இடத்தையும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 5ஆவது இடத்தையும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் 6ஆவது இடத்தையும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் பான் கி மூன் 8ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    மேலும் இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் (11), குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (19), தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி (21), வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா (22), லக்ஷ்மி மிட்டல் (36), மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (44), சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே (46), பொருளியல் அறிஞர் அமர்த்திய சென் (52), ஹந்தி நடிகர் அமிதாப் பச்சன் (63), தமிழ்திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் (66), நடிகர் அமீர்கான் (68), கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் (76), நடிகை ஐஸ்வர்யா ராய் (84), நடிகர் சல்மான்கான் (98), கிரிக்கெட் வீரர் மகேந்தி
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 2014ஆம் ஆண்டில் ஆசிய நாடுகளில் செல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் மஹிந்த ராஜபக்ஷ 34ஆவது இடம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top