சிறுவர்களுக்காக விற்பனை செய்யப்படும் காலாவதியான 60,000 ஜெலி பைக்கற்றுக்கள் நுகர்வோர் அதிகார சபையினரால் மீட்கப்பட்டுள்ளன.
காலி – ஹபராதுவ பகுதி விற்பனை நிலையம் ஒன்றில் இருந்து இந்த ஜெலி பைக்கற்றுக்கள் மீட்கப்பட்டுள்ளன.
காலாவதியான ஜெலி பைக்கற்றுக்களை திகதி மாற்றி விற்பனை செய்ய விற்பனை
நிலைய பொறுப்பாளர்கள் தயார் நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மாவனெல்ல பிரதேச தயாரிப்பு நிலையத்தில் இருந்தே இந்த ஜெலி
பைக்கற்றுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் உரிமையாளர் குறித்து
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையினர்
தெரிவித்தனர்.

0 comments:
Post a Comment