• Latest News

    April 17, 2014

    அப்துல் மஜீட் கல்முனை மாநகர பிரதி முதல்வராக நியமிக்கப்பட வேண்டும்

    கல்முனை நிருபர்;
    ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித்தலைவரும் முன்னாள் வடகிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான முஹம்மட் அப்துல் மஜீட் கல்முனை மாநகர பிரதி முதல்வராக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுப்பதாக அக்கட்சியின் சாய்ந்தமருது அமைப்பாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம். பிர்தௌஸ் தெரிவித்தார்.

    இது தொடர்பில் கட்சியின் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீமுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தொடர்ந்தும் குறிப்பிடும்போது தெரிவித்தார்.
    கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஸிராஸ் மீராசாஹிபின் இராஜிநாமாவைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே மஜீதை நியமித்து அவருக்குபிரதி முதல்வர் பதவியை வழங்க வேண்டும்.

    கட்சியின் மூத்த உறுப்பினராகவும், கட்சிக்காக பல்வேறு வழிகளிலும் பல்வேறு தியாகங்களைச் செய்தவர் என்ற அடிப்படையிலும் இன்னும் கட்சி மாறாமல் பல்வேறு இழப்பக்களைச் சந்தித்தவர் என்ற அடிப்படையிலுமே இவரை நியமிக்கக் கோருகிறேன். அதற்கான தகுதிகள் அனைத்தும் அவரிடமுண்டு.

    முன்னாள் முதல்வர் ஸிராஸ் மீராசாஹிப் சாய்ந்தமருது மக்களின் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றவர் என்ற அடிப்படையில் மீண்டும் அப்பதவி சாய்ந்தமருதிற்கே வழங்கப்பட வேண்டும். எனவேதான், எமது கட்சித்தலைமை இந்த விடயத்தை ஏற்றுக்கொண்டு இந்நியமனத்தை வழங்கும் என நான் எதிர்பார்க்கிறேன் என்றும் பிர்தௌஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அப்துல் மஜீட் கல்முனை மாநகர பிரதி முதல்வராக நியமிக்கப்பட வேண்டும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top