• Latest News

    April 17, 2014

    கல்முனையில் நடமாடும் சேவை

    ஏஎம்பி;
    பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் 'நிறைவான இல்லம் வளமான தாயகம்' எனும் தொனிப் பொருளில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'கிராமிய மக்கள் ஒன்று கூடலும் நடமாடும் சேவையும்' கல்முனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்றது.

    கல்முனைக்குடி 08 – 14 வரையாக கிராம சேவகர் பிரிவுகளுக்கு இடம்பெற்ற இந்நடமாடும் சேவை, பிரதேச செயலாளர் .எம். ஹனீபா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத்தொகுதி அபிவிருத்திக்குழு தலைவருமான சட்டத்தரணி கௌரவ எச்.எம்.எம். ஹரீஸ் பங்குகொண்டு இந்நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைத்தார்.

    இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகள் குழுவின் செயலாளர் .எம். பறக்கத்துள்ளாஹ் அதிபர்கள், ஆசிரியர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    இந்நடமாடும் சேவையில் மக்கள் எதிர்நோக்குகின்ற நிர்வாக பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்பட்டதுடன் இவ்வருடம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக கிராமம் கிராமமாக மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திட்டங்கள் பற்றி அந்தந்த கிராம மக்களுடனும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிளுடனும் கலந்துரையாடப்பட்டது.
    Displaying DSC07247.JPG 
    Displaying DSC07284.JPG 
    Displaying DSC07304.JPG 
    Displaying DSC07319.JPG 
    Displaying DSC07331.JPG
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனையில் நடமாடும் சேவை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top