எஸ். ஸஜாத் முஹம்மத்;
கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றினை AIMS நிறுவனத்தின் கல்வி அபிவிருத்தி. பிரிவு ஏற்பாடு செய்து இருந்தது. இந்நிகழ்வு நிறுவனத்தின் உப தலைவர் எம்.ஐ.எம்.தில்சான் தலைமையில் கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில் நேற்று (17.04.2014) நடைபெற்றது. கடந்த வருடம்
க.பொ.த. சா/த பரீட்சையில் 9 பாடங்களிலும் அதி விசேட சித்தியடைந்த 7 மாணவர்களும், 8 பாடங்களில் அதி விசேட சித்தியடைந்த 10 மாணவர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். 
0 comments:
Post a Comment