• Latest News

    April 23, 2014

    பயங்கரவாத பொதுபல சேனா தம்மை கொலை செய்ய முயற்சிக்கின்றது: வட்டரெக்க விஜித தேரர்

    மஹியாங்கனை பிரதேச சபையை நேற்று சுற்றிவளைத்த பயங்கரவாத பொதுபல சேனா, தம்மை கொலை செய்ய முயற்சித்ததாக ஜாதிக பல சேனா அமைப்பின் ஏற்பாட்டாளர் வட்டரெக்க விஜித தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

    பொலிஸார் அங்கிருந்ததால் தான் உயிர் தப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

    மஹியாங்கனை பிரதேச சபையை நேற்று சுற்றி வளைத்த பொதுபல சேனா அமைப்பினர், விஜித தேரருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதுடன் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
    இது குறித்து விஜித தேரர் மேலும் தெரிவிக்கையில்,

    விடுதலைப் புலிகளிடம் இருந்து காப்பாற்ற நடவடிக்கையில் ஈடுபடுவது போன்று நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் என்னை காப்பற்றினர்.

    என்னை காப்பாற்றிய பொலிஸார் பிரதேச சபையில் இருந்து என்னை வெளியில் அழைத்து வந்தனர்.

    நான் தற்போது இருக்கும் இடத்தை கூறமுடியாது. மிகப் பெரிய அச்சத்தில் இருந்து வருகின்றேன்.

    பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் நேற்று நடைபெற்றதால், விசேட உரையொன்றை நிகழ்த்துவதற்காக நான் வந்தேன். என்னை உள்ளே செல்லவிடாது தடை ஏற்படுத்தினர். பொலிஸாரின் உதவியுடன் பின் வாசல் வழியாக பிரதேச சபைக்குள் சென்றேன்.

    எனினும் சபையின் அமர்வுகளை நடத்த முடியவில்லை. ஒரு மணிநேரம் சபை ஒத்திவைக்கப்பட்டது. என்னால் உரை நிகழ்த்த முடியவில்லை.

    நான் வெளியில் செல்ல சிரமமப்பட்டேன். பொலிஸார் மிகவும் கஷ்டப்பட்டு என்னை பிரதேச சபைக்குள் இருந்து வெளியில் அழைத்து வந்தனர்.

    பிரதேச சபைக்கு வெளியில் பயங்கரவாத பல சேனா என்னை கொலை செய்ய காத்திருந்தது என்றும் வட்டரெக்க விஜித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பயங்கரவாத பொதுபல சேனா தம்மை கொலை செய்ய முயற்சிக்கின்றது: வட்டரெக்க விஜித தேரர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top