எம்.வை.அமீர், எம்.ஐ.சம்சுதீன்;
சாய்ந்தமருது பிரதேச செயலக எல்லைக்குள் இருக்கும் 17 கிராமசேவகர் பிரிவுகளையும் இரண்டாக பிரித்து பொருளாதார அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிறைவான இல்லம் வளமான தாயகம் எனும் தாரகமந்திரத்துடன் 'கிராமம் கிராமமாக வீடுவீடாக' தேசிய அபிவிருத்தித்திட்டம் 2014 நிகழ்வு கல்முனை தொகுதியின் அபிவிருத்திக்குழு தலைவர் பாராளமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் தலைமைத்துவத்துடன் நேற்று சாய்ந்தமருது 01,03,05,07,09,11,14,16 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி அல் ஹிலால் வித்தியாலயத்திலும் இன்று 02,4,06,08,10,12,13,15,17 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி றியாலுல் ஜன்னா வித்தியாலயத்திலும் இடம்பெற்றன.
பாராளமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள், ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவு மக்களையும் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் திட்டமிடல் உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.மஜீத் உட்பட அதிகாரிகளுடன் சந்தித்து அவர்களுடைய தேவைகளை ஆராய்ந்து உடனடியாக செய்யக்கூடிய வேலைத்திட்டங்களுக்கான உத்தரவுகளை அதே இடத்தில் வைத்தே அதிகாரிகளுக்கு வழங்கினார். ஏனைய முகிய வேலைத்திட்டங்களை குறித்த நீதி ஒதுக்கீட்டின் கீழ் செய்வதாகவும் உத்தரவாதமளித்தார்.
சாய்ந்தமருது பிரதேசசெயலகத்தால் நடமாடும் சேவையும் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சகல பிரிவுகளுக்குமான விடயங்களுக்கு மக்களுக்கு அதே இடத்தில் தீர்வுகள் வழங்கப்பட்டதுடன் கல்முனை பொலீஸ் நிலையத்தினாலும் சுகாதார சேவயைப்பொறுத்தமட்டில் பல்சுகாதரத்துக்கான சேவைகளும் வளங்கப்பட்டன் இதேவேளை விவசாயம், மீன்பிடி போன்ற சம்மந்தப்பட்ட நிறுவனங்களாலும் மக்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வின் போது றியாலுல் ஜன்னா வித்தியாலய அதிபரினால் அப்பாடசாலையின் தேவைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் பாரளமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இன்றைய நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் கல்முனை மாநகரசபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் சாய்ந்தமருது அமைப்பாளர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் போன்ற அரசியல்பிரமுகர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment