• Latest News

    December 23, 2013

    நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு-செலவு திட்டம் தோல்வி!

    நாவிதன்வெளி பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் இன்று தவிசாளர் எஸ்.குணரெத்னத்தினால் இன்று காலை 10 மணிக்கு சபையின் மாதாந்த அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட்டது.
    இதன் போது வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக 04வாக்குகளும், ஆதரவாக 03 (தவிசாளர் உட்பட) வாக்குகளும் அளிக்கப்பட்டன.
    நாவிதன்வெளி பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி மீண்டும் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
    நாவிதன்வெளி பிரதேச சபையில் த.தே.கூ உறுப்பினர்கள் 04பேர், மு.கா 01,ஐ.ம.சு.கூ 01.த.ம.வி.பு 01மொத்தம் 07 உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு-செலவு திட்டம் தோல்வி! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top