2014ம் ஆண்டில் ஆசிய நாடுகளில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த் 66வது இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்தின் 'ஆசியன் அவார்ட்ஸ்' என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் தலைசிறந்த 100 ஆசியர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறது.
இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் 63வது இடத்திலும், தமிழ் நடிகர் ரஜினிகாந்த் 66வது இடத்திலும் உள்ளனர்.
பட்டியலில் முதலிடத்தை சீன அதிபர் சீ ஜின்பிங்கும் இரண்டாமிடத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிடித்துள்ளனர்.
பாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி 4வது இடத்தையும், காங்கிரஸ் துணைத்
தலைவர் ராகுல் காந்தி 5வது இடத்தையும் பிரதமர் மன்மோகன் சிங் 6வது
இடத்தையும் பிடித்துள்ளனர்.
இவர்கள் தவிர நிதியமைச்சர் ப.சிதம்பரம் 11 வது இடத்தையும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 19வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
மேலும் தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி 21 வது இடத்தையும், லஷ்மி மிட்டல்
36 வது இடத்தையும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 44 வது இடத்தையும்,
சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே 46 வது இடத்தையும், பொருளியல் அறிஞர் அமர்த்திய
சென் 52 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
நடிகர் அமீர்கான் 68 வது இடத்தையும், கிரிக்கெட் வீரர் சச்சின்
டெண்டுல்கர் 76 வது இடத்தையும், நடிகை ஐஸ்வர்யா ராய் 84 வது இடத்தையும்,
நடிகர் சல்மான்கான் 98 வது இடத்தையும், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங்
தோனி 99 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

0 comments:
Post a Comment