• Latest News

    April 07, 2014

    இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்குப் பதிவு இன்று ஆரம்பம்

    இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது.

    ஆளும் காங்கிரஸ் கட்சியும் இந்து தேசியவாத கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் இந்த தேர்தலில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.

    ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த தேர்தலில் இன்றைய தினம் அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் 2 ஆசனங்களுக்கான வாக்களிப்பு இடம்பெறுகின்றது.
    இந்த தேர்தலின் இறுதிக் கட்டம் மே 12 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் மே மாதம் 16 ஆம் திகதி வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.

    800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இம்முறை மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

    ஊழல் மற்றும் உயர்ந்த பணவீக்கம் என்பன இம்முறை தேர்தலில் முக்கிய இடத்தினைப் பெறும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

    ஊழலுக்கு எதிரான கட்சியாக உருவாக்கியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

    543 ஆசனங்களைக் கொண்ட மக்களவையில் ஆட்சி அமைப்பதற்கு கட்சியொன்றுக்கு அல்லது கூட்டணிக் கட்சிக்கு குறைந்தது 272 ஆசனங்கள் தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

    இந்த தேர்தலில் குஜராத் மாநில முததலமைச்சரும் எதிர்கட்சி பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி வெற்றிபெறுவார் என கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்துள்ளன
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்குப் பதிவு இன்று ஆரம்பம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top