• Latest News

    April 04, 2014

    சாய்ந்தமருதில் அழிந்து போயுள்ள வீதிக்கடவைகள்

    வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கவனத்திற்கு!
    எம்.வை.அமீர்;
    மிகவும் சனநெரிசல் மிக்க சாய்ந்தமருதின் பிரதான வீதியில் சில இடங்களில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் பாதசாரிகளுக்கான வீதிக்கடவைகள் போடப்பட்டுள்ளன. 

    இவைகள் அநேகமான வீதிவிபாத்துக்களை தடுக்கின்ற போதிலும் சில இடங்களில் இடப்பட்டுள்ள பாதசாரிகள் வீதிக்கடவைகளுக்கான மஞ்சள் கோடுகள் அழிந்த நிலையில் உள்ளன.

    விசேடமாக சாய்ந்தமருதின் சுனாமி வீட்டுத்திட்டம் அமைந்துள்ள பேலிவோரியன் கிராமத்துக்கு செல்லும் வீதிக்கடவை அடையாளம் தெரியாத அளவுக்கு அழிவடைந்துள்ளது. வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ள இன்றைய சூழலில் கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபை கவனம் செலுத்துமா என இந்தக் கடவையை உபயோகிக்கும் பாதசாரிகள் அங்கலாய்க்கின்றனர்

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாய்ந்தமருதில் அழிந்து போயுள்ள வீதிக்கடவைகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top