ஐ.சி.சி உலகக்கிண்ண மற்றும் ஆசிய போட்டிகளில் 
பங்கேற்பதற்கு 20 சதவீதம் போட்டி கட்டணமாக தர வேண்டும் என்ற இலங்கை 
வீரர்கள் கோரிக்கையை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்கவில்லை.
இலங்கை கிரிக்கெட் வாரியம் அமைத்த 3 பேர் கொண்ட குழு மற்றும் இலங்கை 
வீரர்கள் தரப்பில் உள்ள அணித்தலைவர் மேத்யூஸ் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு உலகக்கிண்ணம் மற்றும் ஆசிய போட்டிகளில் 
பங்கேற்பதற்கான போட்டி கட்டணமாக 10 சதவீதம் தர கிரிக்கெட் வாரியம் 
முன்வந்ததை வீரர்கள் தரப்பினர் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து 13 வீரர்கள் 
ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடவுள்ளனர்.
0 comments:
Post a Comment