24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்த
சச்சின் இந்திய அணியின் அடையாளமாய், நம்பிக்கை நட்சத்திரமாய்
விளங்குகிறார்.
மதம், மொழி, இனம், சாதி , தேசம் என அனைத்தையும் கடந்து
மக்களால் நேசிக்கப்படுபவர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். சச்சினின் சாதனைகளை
ஒரு கட்டுரையில் பட்டியலிட்டு விட முடியாது. சகாப்தங்களின் பல பகுதிகளில்
எழுதினாலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
‘தேவதைகள் “சச்சின் கொஞ்ச காலம் பூமியில் கிரிக்கெட் ஆடிவிட்டு வா”
என்று சொல்லி அனுப்பி வைக்கப்பட்ட தூதுவன் டெண்டுல்கர்”. என்ற
ரவிசாஸ்திரியின் வார்த்தைகள் எப்படி பொய்யாகி விட முடியும்.
சச்சின் இன்னும் நம் உள்ளத்தில் உயர்ந்து நிற்பது அவரது சாதனைகளால்
மட்டுமல்ல அவரது எளிமையாலும், தன்னடக்கத்தாலுமே. 24 வருடம் இந்திய அணியை
சுமந்த, 24 ஏப்ரல் 1973 இல் பிறந்த, தனது 41 வயதில் அடியெடுத்து வைக்கும்
இந்த வரலாற்று நாயகனின் வாழ்வு செழிக்கட்டும்.
0 comments:
Post a Comment