உணவு ஒவ்வாமை காரணமாக அட்டாளைச்சேனையில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் அட்டாளைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் உட்கொண்ட உணவே அவர்களை பாதிப்படையச் செய்திருக்கலாம் எனவும்
அரிப்பு, தோற்பகுதி தடித்திருத்தல் மற்றும் உடல்பலவீனம் போன்ற நோய்
அறிகுறிகள் அவர்களிடம் தென்படுவதாகவும் அட்டாளைச்சேனை பிரதேச
வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர். ஏ.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.
இது தொடர்பில் கண்டறிவதற்காக அட்டாளைச்சேனைப் பிரதேச சுகாதார வைத்திய
அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும்
தெரிவித்தார்.
அம்பாறை, அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பிரபல
பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவர்கள் ஏழு பேர், திடீர் சுகவீனமுற்ற நிலையில்
அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் சற்றுமுன்னர்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையைச் சேர்ந்த தரம் ஏழு மற்றும் தரம் ஆறைச் சேர்ந்த மாணவர்களை இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment